azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Look at the crane; it walks about pretty fast in water. But while walking, it can’t catch fish; for that purpose, it must become quiet and stand motionless. So also, if one proceeds with greed, anger, jealousy, etc., one cannot secure the fish of truth (satya), righteousness (dharma), and peace (shanti). Whatever spiritual practice one may have, one must practise uninterrupted remembrance of the name (namasmarana). Only then can one master the natural attributes of greed, anger, etc. All scriptures (sastras) teach but this one lesson: since the Lord is the universal goal and this journey of life has Him as the destination, keep Him constantly in view and subdue the mind which makes you wander away from the path. All good qualities automatically gather around the person who practises control of speech and constant contemplation of the Lord. (Prema Vahini, Ch 56)
SPEAK SOFTLY, SHED COMFORT WITH EVERY GLANCE OF YOURS.
DO NOT BE SLAVES TO YOUR SENSUAL DESIRES. - BABA
கொக்கைப் பாருங்கள்; அது தண்ணீரில் இருக்கும் போது வேகமாக நடக்கிறது. ஆனால், நடந்து கொண்டு இருக்கும் போது, அதனால் மீனைப் பிடிக்க முடியாது; அதற்காக அது அமைதியாகி, சலனமற்று நிற்க வேண்டும். அதைப் போலவே, நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையை, பேராசை, கோபம் போன்ற குணங்களோடு நடத்தினீர்களானால், நீங்கள் சத்தியம், தர்மம் மற்றும் சாந்தி என்ற மீனைப் பெற முடியாது. ஒருவர் எந்த விதமான ஆன்மிக சாதனையில் ஈடுபட்டிருந்தாலும், இடையறாத இறை நாமஸ்மரணையைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதன் பின்னரே, இயல்பான குணங்களான பேராசை, கோபம், போன்றவற்றை நீங்கள் வெல்ல முடியும். அனைத்து சாஸ்திரங்களும் இந்த ஒரு பாடத்தைத் தான் போதிக்கின்றன; இறைவனே பிரபஞ்சமயமான குறிக்கோளாக இருப்பதாலும், இந்த வாழ்க்கைப் பயணம் அதன் முடிவாக சேரும் இடமாக இறைவனையே கொண்டிருப்பதாலும், இறைவனை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொண்டு, நற்பாதையில் இருந்து உங்களை வழுவச் செய்யும் மனதை அடக்குங்கள். பேச்சில் கட்டுப்பாடு மற்றும் இறைவனை இடையறாது தியானிப்பது என்பதைக் கடைப்பிடிப்பவரிடம், அனைத்து நல்ல குணங்களும் தானாகவே வந்து சேரும்.
இதமாகப் பேசுங்கள், உங்களது ஒவ்வொரு பார்வையிலும் ஆறுதலைப் பொழியுங்கள். உங்களது புலனாசைகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள்- பாபா