azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

When you are ill or when your mind is immersed in something else, you will not enjoy the taste of food. So also, when the heart is full of ignorance (tamas) or is wayward, you will not experience joy even when you are engaged in remembrance of the name (nama-smarana), devotional singing, recitation of the name (japa), or meditation. The tongue will be sweet as long as there is sugar on it. Likewise, if the pillar of light called devotion continues to burn in the corridor of the heart, there will be no darkness. The heart will be illumined in bliss. A bitter thing on the tongue makes the whole tongue bitter; when the qualities of greed and anger enter the heart, the brightness disappears, darkness dominates the scene, and one becomes the target of countless griefs and losses. Therefore, those who aspire to attain the holy presence of the Lord must acquire certain habits, disciplines, and qualities. (Prema Vahini, Ch 56)
USUAL WAYS OF LIFE WILL NOT LEAD YOU TOWARDS GOD.
THEY MUST BE MODIFIED THROUGH SPIRITUAL DISCIPLINE. - BABA
நீங்கள் நோய்வாய் பட்டிருந்தாலோ அல்லது உங்கள் மனம் வேறு எதிலாவது ஆழ்ந்திருந்தாலோ, நீங்கள் உணவின் சுவையை உணர மாட்டீர்கள். அதைப் போலவே, உங்கள் இதயம் அறியாமையால் நிரம்பியிருந்தாலோ அல்லது அலை பாய்ந்து கொண்டு இருந்தாலோ, நீங்கள் இறைநாமஸ்மரணை, பஜனை, ஜபம் அல்லது தியானத்தில் ஈடுபட்டு இருந்தாலும் கூட, ஆனந்தத்தை அனுபவிக்க மாட்டீர்கள். அதில் சர்க்கரை இருக்கும் வரை தான், நாக்கு இனிமையாக இருக்கும். அதைப் போலவே, பக்தி எனும் விளக்குக் கம்பம் உங்கள் இதயம் எனும் முற்றத்தில் எரிந்து கொண்டு இருக்கும் வரை, அங்கு இருள் இருக்காது. இதயம் ஆனந்தத்தால் ஒளி விட்டுத் திகழும்.நாக்கில் கசப்பான ஒன்று இருந்தால், அது நாக்கு முழுவதையும் கசப்பாக்கி விடும்; பேராசை மற்றும் கோபம் என்ற குணங்கள் இதயத்தில் புகுந்து விட்டால்,வெளிச்சம் மறைந்து விடுகிறது, இருள் அவ்விடத்தில் சூழ்ந்து விடுகிறது, மேலும் ஒருவர் எண்ணற்ற துக்கங்கள் மற்றும் நஷ்டங்களுக்கு இலக்காகி விடுகிறார். எனவே, இறைவனது புனித சன்னிதானத்தை அடைய விழைவோர், சில பழக்கங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் குணங்களைப் பெற்றே ஆக வேண்டும்.
வழக்கமான வாழ்க்கை முறைகள் உங்களை இறைவனை நோக்கி இட்டுச் செல்லாது. ஆன்மிக சாதனையின் மூலம் அவை திருத்தி அமைக்கப் பட வேண்டும் - பாபா