azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The Name is the spring of all the essence of the Supreme Spirit (the Chaithanya) that you get by remembrance of the Name; it is the life-giving nectar; it is the fountain of primal energy. Recite the Name and the Named will be before you; picture the Named and the Name will leap to your lips. Name and form are the reverse and the obverse of the same coin. Some vow to write the name of the Lord a million times, but very often it is just a matter of the fingers and the pen. The mind should not wander from the name. It should dwell on the sweetness that the name connotes; it should ruminate on the beauty of the form that it recalls and the perfume that it spreads. The conduct and behaviour of the writer should be such as befits a servant of God — others should be inspired by them, and their faith should get freshened by the experience of the writer. (Divine Discourse Apr 28, 1962)
LIVE, AVOIDING EVIL DEEDS, HATEFUL AND HARMFUL THOUGHTS,
AND DON’T GET ATTACHED TO THE WORLD. - BABA
இறைநாமஸ்ரணை செய்வதால், உங்களுக்குக் கிடைக்கும் அந்த நாமமே, பரமாத்மாவின் (சைதன்யா) அனைத்து சாரத்தின் ஊற்றாகும்; அதுவே உயிரூட்டும் அமிருதமும் ஆகும்; அதுவே ஆதார சக்தியின் ஊற்றும் ஆகும். இறை நாமத்தை உச்சரியுங்கள்; அப்படி அழைக்கப் பட்டவர் உங்கள் முன் தோன்றுவார்; அந்த நாமத்தை உருவகப் படுத்துங்கள், அந்த நாமம் உங்கள் உதடுகளில் பாய்ந்தோடி வரும். இறை நாமமும், இறை ரூபமும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். சிலர் இறைவனது திருநாமத்தை லக்ஷக்கணக்கில் எழுதுவதாக விரதம் எடுத்துக் கொள்வார்கள்; ஆனால் அது பெரும்பாலும் விரல்கள் மற்றும் பேனா சம்பந்தப் பட்டதாக மட்டுமே இருக்கும். மனம் அந்தத் திருநாமத்திலிருந்து விலகிச் செல்லக் கூடாது. அந்த நாமம் சுட்டிக் காட்டும் இனிமையில் அது திளைத்திருக்க வேண்டும்; அது நினைவு கூறும் ரூபத்தின் அழகையும், அது பரப்பும் நறுமணத்தையும் அது தியானிக்க வேண்டும். எழுதுபவரின் நடத்தை, இறைவனது ஒரு சேவகனுக்கு ஏற்றதாக இருந்து, மற்றவர்கள் அதனால் உத்வேகம் அடைந்து, எழுதுபவரின் அனுபவத்தினால், அவர்களது நம்பிக்கை புத்துணர்வு பெற வேண்டும்.
தீய செயல்கள், வெறுப்பான, தீங்கு விளைவிக்கும் சிந்தனைகள் ஆகியவற்றைத் தவிர்த்து வாழுங்கள்; மேலும் உலகின் மீது பற்று வைக்காதீர்கள்- பாபா