azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

When Narada once asked Sri Ramachandra about the nature and characteristics of His servants and spiritual aspirants, He answered, “They are full of love; they always stand by righteousness; they speak the truth; their hearts melt with mercy; they are devoid of wrong; they avoid sin; their nature is well-founded; they will renounce everything gladly; they eat in moderation; they are engaged in doing good to others; they have no selfishness; they aren’t worried by doubts. They won’t lend their ears to flattery but are eager to listen to the praise of the good nature of others. They have beautiful, strong, and holy character. Spiritual aspirants are those who endeavour to acquire such qualities. Now I shall tell you about those who are dear to Me: Anyone who is engaged in repetition of the name, penance, and vows, anyone who has self-control and discipline, anyone who has faith, patience, comradeship, kindness and joy as well as unalloyed love towards Me — such a person is dear to Me.” - Prema Vahini, Ch 48
A PURE HEART IS THE ESSENCE OF ALL SADHANA (SPIRITUAL PRACTICES). - BABA
ஒரு முறை நாரதர்,பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை, அவரது பக்தர்கள் மற்றும் ஆன்மிக சாதகர்களின் தன்மையைப் பற்றிக் கேட்ட போது, பகவான் கூறியதாவது,’’எனது பக்தர்கள் ப்ரேமையால் நிரம்பியவர்கள்;அவர்கள் எப்போதும் தர்மத்தையே பற்றி நிற்பவர்கள்;அவர்கள் சத்தியத்தையே பேசுவார்கள்; அவர்கள் தவறே அற்றவர்கள்; அவர்களது இதயங்கள் கருணையால் உருகுபவை;அவர்கள் பாவத்தைத் தவிர்ப்பார்கள்;அவர்களது இயல்பு நன்கு வேறூன்றியதாகும்; அவர்கள் எல்லாவற்றையும் சந்தோஷமாகத் தியாகம் செய்பவர்கள்; அவர்கள் மிதமாகச் சாப்பிடுபவர்கள்; அவர்கள் மற்றவர்களுக்கு நற்கருமங்களை ஆற்றுவதில் ஈடுபட்டு இருப்பார்கள்; எந்த விதமான சுயநலமும் அவர்களுக்கு இல்லை; அவர்கள் சந்தேகங்களினால் கவலைப்படுவதில்லை. அவர்கள் புகழ்ச்சிக்குச் செவி சாய்க்காது,ஆனால் மற்றவர்களில் உள்ள நல்லவற்றைப் புகழ்வதைக் கேட்க ஆவலுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் அழகான, வலிமையான மற்றும் புனிதமான குணநலன் கொண்டவர்கள்.இப்படிப் பட்ட குணங்களைப் பெற விழைவோரே ஆன்மிக சாதகர்கள் ஆவார்கள். இப்போது, நான் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களைப் பற்றிக் கூறப் போகிறேன்; இறை நாமஸ்மரணை, தவம் மற்றும் விரதங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர், புலனடக்கம் மற்றும் கட்டுப்பாடு கொண்டவர், நம்பிக்கை, பொறுமை,நட்புணர்வு, கனிவு மற்றும் ஆனந்தம் உடையவர்களாக இருப்பதோடு, என்னிடம் களங்கமற்ற ப்ரேமை கொண்டவர் - இப்படிப் பட்ட ஒரு மனிதரே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்.’’
ஒரு பரிசுத்தமான இதயமே, அனைத்து ஆன்மீக சாதனைகளின் சாரம் ஆகும். - பாபா