azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Never forget that any and every spiritual effort is of no avail if your heart is not pure! Look at the fish! Living as it does perpetually in water, has it got rid itself of its foul smell to any extent? No! Inclinations (vasanas) will not disappear as long as one’s heart is full of the illusion of egotism, even if one is immersed in many different heart-purifying spiritual disciplines. Light and darkness can never coexist at the same place and at the same time, right? Similarly, negative tendencies (vikaras) such as egoism, etc. cannot coexist in the same heart with that of pure virtues. One whose heart is ruled by the group of six passions can have only ego (ahamkara) as counselor (manthri)! Those people, who would like to get rid of the feeling of “I” and “mine”, must worship the Lord (Hari). They must become true spiritual aspirants, free from preferences, likes and dislikes. (Prema Vahini, Ch 43)
A PURE HEART IS THE ESSENCE OF ALL SADHANA (SPIRITUAL PRACTICES) - BABA
எந்த மற்றும் ஒவ்வொரு ஆன்மிக சாதனையும், உங்கள் இதயம் பரிசுத்தமாக இல்லை என்றால், பயனற்றதே! மீனைப் பாருங்கள்! அது தண்ணீரிலேயே நிரந்தரமாக இருந்தாலும், அது தனது துர்நாற்றத்தை எந்த அளவாவது விட்டு ஒழித்திருக்கிறதா? இல்லையே! ஒருவர், இதயத்தைப் பரிசுத்தமாக்கும் பல விதமான ஆன்மிக சாதனைகளில் மூழ்கி இருந்தாலும் கூட, அவரது இதயம் அஹங்காரத்தின் மாயையால் நிரம்பி இருக்கும் வரை, உள்ளார்ந்த உந்துதல்கள் (வாஸனாஸ்) மறையாது. வெளிச்சமும், இருட்டும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. இல்லையா? அதைப் போலவே, எதிர்மறை உந்துதல்களான (விகாராஸ்) அஹங்காரம் போன்றவை, அதே இதயத்தில், பரிசுத்தமான சீலங்களுடன் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. ஆறு விதமான தீய உணர்ச்சிகளினால் ஆளப்படும் ஒருவரது இதயம், மமதையை (அஹங்காரா) மட்டுமே அதன் (ஆலோசகர்) மந்திரியாகக் கொண்டிருக்க முடியும்! ‘’ நான் ‘, ‘’ எனது’’ என்ற உணர்வுகளை விட்டு விட விரும்புவோர், இறைவனை (ஹரி) வழிபட வேண்டும். அவர்கள்,விருப்பு மற்றும் வெறுப்பு அற்ற, உண்மையான ஆன்மிக சாதகர்களாக ஆக வேண்டும்.
ஒரு பரிசுத்தமான இதயமே, அனைத்து ஆன்மீக சாதனைகளின் சாரம் ஆகும். - பாபா