azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Human birth is very difficult to attain. Your body is like a caravanserai; your mind is its watchman and your individual soul (jivi) is the pilgrim. None of these has any kinship with the others. The pilgrim is bound for Salvation City (Moksha-puri). For a trouble-free journey, there is nothing as reliable as repeating the name of God (namasmarana), the remembrance of the name of the Lord. Once the sweetness of that name has been experienced, the person won’t have exhaustion, unrest, or sloth but will fulfil the pilgrimage of spiritual practice joyfully, enthusiastically, and with deep conviction. Still, to achieve this spiritual practice, righteousness (sadbhava) is very important. Without fear of the consequences of an act of sin, righteousness will not originate, and love of God will not develop either. This fear will help righteousness and devotion grow, resulting in true worship of the Lord. (Prema Vahini, Ch 42)
WALK THE PATH OF SPIRITUALITY TO REACH THE DESTINATION OF LIBERATION! - BABA
மனிதப் பிறவியைப் பெறுவது மிகவும் கடினமானதே. உங்களது உடல் யாத்திரீகர்கள் தங்கும் சத்திரம் போன்றது; உங்களது மனமே அதன் காவலாளி, உங்களது தனி ஜீவனே (ஜீவி) யாத்திரீகர். இந்த எதுவும், மற்ற எவருடனும் எந்த உறவும் கொண்டதல்ல. யாத்திரீகர் மோக்ஷபுரியை நோக்கிச் செல்பவராவார். இன்னலற்ற பயணத்திற்கு, இறை நாமஸ்மரணையை விட நம்பிக்கையானது வேறு எதுவும் இல்லை. ஒருமுறை அந்தத் திரு நாமத்தின் இனிமையைச் சுவைத்து விட்டால், அந்த மனிதர், களைப்போ, கலக்கமோ அல்லது சோம்பலோ இன்றி, தனது ஆன்மிக சாதனை என்ற தீர்த்த யாத்திரையை சந்தோஷமாக, உற்சாகமாக, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூர்த்தி செய்வார். இருந்தாலும், இந்த ஆன்மிக சாதனையைக் கடைப்பிடிப்பதற்கு நல்லுணர்வு (ஸத்பாவம்) மிகவும் முக்கியமானதாகும். ஒரு பாவகரமான செயலின் விளைவுகளைப் பற்றிய அச்சம் இல்லாமல், நல்லுணர்வும் தோன்றாது மேலும் தெய்வத்தின் பால் ப்ரேமையும் கூட அபிவிருத்தி ஆகாது. இந்த அச்சம், நல்லுணர்வும், பக்தியும் வளர உதவி, இறைவன் மீது உண்மையான வழிபாட்டை ஏற்படுத்தும்.
ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் இலக்கை அடைய,
ஆன்மிக சாதனை எனும் பாதையில் செல்லுங்கள் - பாபா