azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The attitude of the worshiper and the worshiped is the seed of devotion (bhakti). First, the worshiper’s mind is attracted by the special qualities of the object of worship. The worshipper tries to acquire these special qualities. This is spiritual discipline (sadhana). In the early stages of sadhana, the distinction between worshiper and worshiped is full, but as the spiritual discipline progresses, this feeling diminishes and, when attainment is reached, there is no distinction whatsoever! Whatever be the object of worship one has grasped and loved and sought by spiritual discipline, one should have firm faith that the individual self (jivatma) is the supreme Lord (Paramatma). There is only one wish fit to be entertained by the aspirant: the realisation of the Lord (Iswara Sakshatkara). There is no room in the mind for any other wish. (Prema Vahini, Ch 39)
THE ONE FILLED WITH DIVINE LOVE WILL BE FEARLESS, SPONTANEOUS AND SELFLESS IN
EXPRESSING THEIR LOVE AND WILL SEEK NO REWARD. - BABA
ஆராதிப்பவர் மற்றும் ஆராதிக்கப்படுபவரின் மனப்பாங்கே, பக்தியின் வித்தாகும். முதலில், ஆராதிப்பவரின் மனம், ஆராதிக்கப்படும் பொருளின் தனிப்பட்ட குணங்களால் ஈர்க்கப் படுகிறது.ஆராதிப்பவர், இந்த தனிப்பட்ட குணங்களைப் பெற முயற்சிக்கிறார். இதுவே ஆன்மிக சாதனை. ஆன்மிக சாதனையின் ஆரம்ப நிலையில், ஆராதிப்பவர் மற்றும் ஆராதிக்கப்படுபவரின் இடையே உள்ள வித்தியாசங்கள் முழுமையாக இருக்கும்; ஆனால், ஆன்மிக சாதனை முன்னேற முன்னேற, இந்த உணர்வு குறைந்து, வெற்றியை அடையும்போது, எந்த விதமான பாகுபாடுகளும் இருப்பதில்லை! ஆன்மிக சாதனையின் மூலம் ஒருவர் புரிந்து கொண்டு,நேசித்து, நாடிய ஆராதிக்கும் பொருள் எதுவாக இருந்தாலும், தனிப்பட்ட மனிதனே ( ஜீவாத்மா), இறைவன் ( பரமாத்மா ) என்ற உறுதியான நம்பிக்கை ஒருவருக்கு இருக்க வேண்டும். சாதகருக்கு இருக்க வேண்டிய விருப்பம் ஒன்றே ஒன்றுதான்; அதுவே இறைவனை உணர்வது (ஈஸ்வர சாக்ஷாத்காரா). வேறு எந்த விதமான விருப்பத்திற்கும் மனதில் இடம் அளிக்கக் கூடாது.
தெய்விக ப்ரேமையால் நிரம்பிய ஒருவர்,தங்களது ப்ரேமையை வெளிப்படுத்துவதில்,அச்சமற்றவராகவும், ஆர்வமுள்ளவராகவும், தன்னலமற்றவராகவும், எந்தப் பலனையும் எதிர் பார்க்காதவராகவும் இருப்பார்- பாபா