azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

How is love to be cultivated? Through two methods: 1. Always consider the faults of others, however big, to be insignificant and negligible. Always consider your own faults, however insignificant and negligible, to be big, feel sad and repent sincerely. Through these methods, you help yourself not commit big errors and faults; you also acquire the qualities of brotherliness and forbearance. 2. Whatever you do, with yourself or with others, do it remembering that God is omnipresent. He sees and hears every word and knows everything you do. Whatever you speak remember that God hears every word; discriminate between the true and the false, and speak only the truth. Whatever you do, discriminate between right and wrong and do only the right. Endeavour every moment to live in the awareness of the omnipotent Lord. (Prema Vahini, Ch 19)
GOD IS LOVE,LIVE IN LOVE. - BABA
ப்ரேமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்? இரண்டு விதமாக: 1. எப்போதும், அவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், மற்றவர்களது குறைகளை, முக்கியமற்றதாகவும், அற்பமானதாகவும் கருதுங்கள். எப்போதும், அவை எவ்வளவு முக்கியமற்றதாகவும், அற்பமானதாகவும் இருந்தாலும் கூட உங்களது குறைகளை, அவற்றைப் பெரிதாகக் கருதி, சோகமடைந்து, உளமாற பச்சாதாபப் படுங்கள். இந்த முறைகளின் மூலம், பெரிய தவறுகளையும், குறைகளையும் செய்யாமல் இருப்பதற்கு,நீங்கள் உங்களுக்கே உதவி செய்து கொள்வீர்கள். மேலும் சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற குணங்களையும் நீங்கள் பெறுவீர்கள். 2. நீங்கள், உங்களுக்காகவோ அல்லது பிறருக்காகவோ, எதைச் செய்தாலும், இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான் என்பதை நினைவில் கொண்டு செய்யுங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் அவன் பார்க்கிறான், கேட்கிறான்,நீங்கள் செய்யும் அனைத்தையும் அவன் அறிவான். நீங்கள் பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் இறைவன் கேட்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; உண்மை மற்றும் பொய்மையை பகுத்தறிந்து, உண்மையை மட்டுமே பேசுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், சரியானவை மற்றும் தவறானவற்றைப் பகுத்தறிந்து, சரியானவற்றை மட்டுமே செய்யுங்கள். ஸர்வ வல்லமை பொருந்திய இறைவனைப் பற்றிய விழிப்புணர்வுடன் வாழ, ஒவ்வொரு தருணத்திலும் முற்படுங்கள்.
ப்ரேமையே தெய்வம், ப்ரேமையில் வாழுங்கள். - பாபா