azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Today is Sankranti, which marks the commencement of Uttarayana, the auspicious and sacred time. At least from today onwards, develop noble feelings. Follow the sacred path. Then your future will certainly be safe and secure. With prayer to God, you can achieve anything in life. I want you to pray. I am always with you, in you, above you, and around you. Make efforts to instill such faith and devotion in fellow human beings. That will make Me very happy. Happiness lies in union with God. Hence contemplate on God incessantly. Never give scope for anxiety or worry thinking, “Examinations are approaching. How am I going to face them? Will I pass?” Do not give scope for despair and despondency with such negative attitude. Have faith in God. Do your duty and face any situation with courage. Then, the result is bound to be good. Love is everything. Love is God. Live in love. (Divine Discourse, Jan 14, 2006)
AVOID HATING, ENVYING OR EVEN DISLIKING ANYONE.
PUT LOVE INTO PRACTICE THROUGH SELFLESS SERVICE. - BABA
மங்களகரமான மற்றும் புனிதமான காலமான உத்தராயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் இன்றே சங்கராந்தி. இன்றிலிருந்தாவது, சீரிய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். புனிதமான பாதையைப் பின்பற்றுங்கள். பின்னர், உங்களது எதிர்காலம் நிச்சயமாக பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இறைவனைப் பிரார்த்திப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் எப்போதும், உங்களுடனும், உங்களுள்ளும், உங்கள் மேலும், உங்களைச் சுற்றியும் இருக்கிறேன். இப்படிப் பட்ட நம்பிக்கை மற்றும் பக்தியை சக மனிதருள்ளும் உண்டாக்கிட முயற்சி மேற்கொள்ளுங்கள். அது என்னை மிகவும் மகிழச் செய்யும். ஆனந்தம் இறைவனோடு இரண்டறக் கலப்பதில் தான் இருக்கிறது.எனவே, இறைவனை, இடையறாது தியானியுங்கள்.’’ பரீட்சைகள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. நான் அவற்றை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறேன்? நான் தேர்வடைவேனா?’’ என்று எல்லாம் எண்ணி, ஒரு போதும் கலக்கம் அல்லது கவலைக்கு இடம் அளிக்காதீர்கள். இப்படிப் பட்ட எதிர்மறையான மனப்பாங்கின் மூலம், விரக்தி அல்லது மனச்சோர்வுக்கு வாய்ப்பு அளிக்காதீர்கள். இறைவன் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்கள் கடமையை ஆற்றி, எந்த நிலைமையையும் தைரியமாக எதிர் கொள்ளுங்கள். பின்னர், விளைவுகள் நல்லவையாகவே அமையும். ப்ரேமையே அனைத்தும். ப்ரேமையை இறைவன். ப்ரேமையின் வாழுங்கள்.
எவரையும் வெறுப்பதையோ, அவரைக் கண்டு பொறாமைப் படுவதையோ, ஏன் அவரைப் பிடிக்காமல் இருப்பதையோ கூடத் தவிர்த்து விடுங்கள். தன்னலமற்ற சேவையின் மூலம், ப்ரேமையை நடைமுறைப் படுத்துங்கள் - பாபா