azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Concentrate on the love of God. Although one’s mother, father and preceptor are to be adored as divine beings, they are not God. God should be worshipped as mother, father, preceptor, kinsman, and friend. They all dwell in their respective abodes, but God dwells in your heart. Love the Lord who resides in your heart. All other objects of love are impermanent. By developing love, one sees the Divine in all beings. It is like wearing coloured glasses. If you see the world through the glasses of love, you will see love everywhere. The glasses and vision must be in harmony, and only with love, youcan see loveliness in the world. It is through love that noble qualities such as kindness, compassion and empathy are fostered. Embodiments of Love! You are carrying on a variety of spiritual exercises (sadhanas). God does not seek your sadhana. Nor does He seek your devotion. He seeks only your love. (Divine Discourse, July 9, 1998)
THERE IS NO GREATER SPIRITUAL PATH THAN THE PATH OF LOVE. - BABA
இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையில் கவனம் செலுத்துங்கள். ஒருவரது தாய், தந்தை மற்றும் குரு ஆகியோரை தெய்வீகமானவர்களாகப் போற்றினாலும், அவர்கள் இறைவன் அல்ல. இறைவனைத் தாய், தந்தை, குரு. உறவினன் மற்றும் நண்பனாக வழிபட வேண்டும். அவர்கள் அனைவரும் தத்தம் இருப்பிடங்களில் வசிக்கிறார்கள், ஆனால், இறைவன் உங்கள் இதயத்தில் வசிக்கிறான். உங்கள் இதயத்தில் உறையும் இறைவனை நேசியுங்கள். நேசிக்கப் படும் பிற அனைத்து பொருட்களும் நிலையற்றவையே. ப்ரேமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவர் அனைத்து ஜீவ ராசிகளிலும் தெய்வீகத்தைக் காண்கிறார். இது, வண்ணக் கண்ணாடியை அணிவது போலாகும். நீங்கள் உலகத்தை ப்ரேமை எனும் கண்ணாடியின் மூலம் நோக்கினால் நீங்கள் எங்கும் ப்ரேமையையே காண்பீர்கள். கண்ணாடியும், பார்வையும் இசைவாக இருக்க வேண்டும்; ப்ரேமையினால் மட்டுமே நீங்கள் உலகத்தில் நேசத்தைக் காண முடியும். ப்ரேமையின் மூலமே, கனிவு, பரிவு மற்றும் பச்சாதாபம் போன்ற நற்சீலங்களைப் பேண முடியும். ப்ரேமையின் திருவுருவங்களே! நீங்கள் பல விதமான ஆன்மிக சாதனைகைள மேற்கொண்டுள்ளீர்கள். இறைவன் உங்கள் சாதனையை நாடுவதில்லை. அவன் உங்களது பக்தியைக் கூட நாடுவதில்லை. அவன் வேண்டுவது எல்லாம் உங்களது ப்ரேமையை மட்டுமே.
.
ப்ரேமையின் பாதையை விடச் சிறந்த ஆன்மிகப் பாதை வேறு எதுவும் இல்லை - பாபா