azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Happiness and sorrow have to be experienced in the worldly life as they are inevitable like the sunset and sunrise. You think new year will give better experiences; this is not correct. It is the mind that is responsible for pleasure and pain. If your mind is good, you will find anything good. You are embodiments of the Divine which is nothing but bliss. While being so, is it not folly on your part to say that you are suffering from pain and grieve over this? Some want to have uninterrupted happiness. When you eat at 10 a.m. you do not go on eating every hour thereafter without break. So also when you experience pleasure it has to be digested before you meet with another bout of such experience. Just as you have to do some exercise for helping the food to digest, you have to go through the exercise of confrontation of pain after experiencing pleasure. Therefore, you must take whatever is given by God as good for you. (Divine Discourse, Jan 1, 1994)
CONSIDER ALL YOUR ACTS AS WORSHIP. DUTY IS GOD, WORK IS WORSHIP. WHATEVER HAPPENS ACCEPT IT GLADLY AS HIS HANDIWORK, A SIGN OF HIS COMPASSION. - BABA
உலக வாழ்க்கையில், சந்தோஷத்தையும், துயரத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும், ஏனெனில், அவை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைப் போலத் தவிர்க்க முடியாதவை. புத்தாண்டு உங்களுக்கு மேலும் சிறந்த அனுபவங்களைத் தரும் என நினைக்கிறீர்கள்; இது சரியல்ல.மனமே, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம்.உங்கள் மனம் நல்லதாக இருந்தால், நீங்கள் அனைத்தும் நல்லவையாக இருப்பதாகக் காண்பீர்கள். நீங்கள், பேரானந்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத தெய்வீகத்தின் திருவுருவங்களே. அப்படி இருக்கும் போது, நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்று கூறி இதற்காக வருந்துவது உங்களது தவறு தானே? சிலர் இடையறாத சந்தோஷத்தை விரும்புகிறார்கள். நீங்கள் காலை 10 மணிக்கு உணவு அருந்தினால், அடுத்து ஒவ்வொரு மணி நேரமும், இடைவெளியே இல்லாமல், சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில்லை. அதைப் போலவே, நீங்கள் இன்பத்தை அனுபவிக்கும் போது, அதைப் போன்ற மற்றொரு அனுபவத்தைப் பெறுவதற்கு முன், அது ஜீரணமாக வேண்டும். எவ்வாறு நீங்கள் உண்ட உணவு ஜீரணிக்க உதவுவதற்கு, நீங்கள் சில உடற்பயிற்சிகள் செய்ய வேண்டி உள்ளதோ, அவ்வாறே, இன்பத்தை அனுபவித்த பிறகு, நீங்கள் துன்பம் எனும் உடற்பயிற்சியை எதிர் கொண்டே ஆக வேண்டும். எனவே, இறைவன் அளிக்கும் எதுவானாலும், அது உங்களுக்கு நல்லதே என நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் செயல்கள் அனைத்தையும் வழிபாடாகக் கருதுங்கள். கடமையே கடவுள். உழைப்பே வழிபாடு. எது நடந்தாலும், அதை இறைவனது செயல் மற்றும் அவனது கருணையின் ஒரு சின்னமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்- பாபா