azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of love! Brahman (Divinity) is full of love and is in fact the embodiment of love. Your love should merge with this love. This is only one; there is no second. It is the non-dual state. The essential nature of love is sacrifice. Under any circumstances true love does not give room for hatred. It is love that brings even a person far away closer and more intimate to you. It is love that drives away the feeling of separateness and promotes the feeling of oneness. Love also raises a person from the animal to the human. Prema (Love) is the Prana (Life Force) of mankind. Love is shown only to persons who are alive. No one loves a corpse. One without love is like a lifeless corpse. Love and life are therefore inter-related and intimately connected. (Divine Discourse, Jan 1, 1994.)
LOVE SEEKS NO REWARD; LOVE IS ITS OWN REWARD. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! பரப்ரம்மன், ப்ரேமையே நிரம்பியது; உண்மையில் அது ப்ரேமையின் திருவுருவமே. உங்களது ப்ரேமை, இந்த ப்ரேமையுடன் இரண்டறக் கலந்து விட வேண்டும். இது ஒன்றே ஒன்று தான், இரண்டாவது என்பதே இல்லை. இதுவே அத்வைத நிலை. ப்ரேமையின் அத்தியாவசியமான இயல்பு தியாகமே. எந்த சந்தர்ப்பத்திலும், ப்ரேமை, த்வேஷத்திற்கு இடம் அளிக்காது. ப்ரேமையே, வெகு தொலைவில் இருக்கும் ஒருவரைக் கூட, உங்களுக்கு மிக அருகிலும், அதிக நேசமானவராகவும் கொண்டு வந்து விடும். ப்ரேமையே, பிரிவின் உணர்வை விரட்டி விட்டு, ஒருமையின் உணர்வை வளர்க்கிறது. ப்ரேமை, ஒரு மனிதனை மிருக நிலையிலிருந்து, மனித நிலைக்குக் கொண்டு செல்கிறது. ப்ரேமையே, மனித குலத்தின் ப்ராணனாகும். எவரும் ஒரு சவத்தை நேசிப்பதில்லை. ப்ரேமை அற்ற ஒருவர், ஒரு உயிரற்ற சவத்தைப் போன்றவரே. ப்ரேமையும், ப்ராணனும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டதும், இறுக்கமாக இணைந்ததும் ஆகும்.
ப்ரேமை எந்த வெகுமதியையும் நாடுவதில்லை;
ப்ரேமையே, அதன் வெகுமதியாகும் - பாபா