azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

When work is undertaken with an egoistic attitude, impelled by selfish motives and inspired by hopes of self-advancement, it feeds greed and pride, envy and hatred. Then it fastens the bond and fosters the feeling of attachment to more profitable work. It promotes ingratitude to those who lent their hands and brains, and to God Himself who endowed the person with the urge and the skill. "I did it", one declares when the work succeeds and say "Others spoiled it" when it fails. Resentment, depression and despair follow when the work results in failure. The more deeply one is attached to the fruits, the more intense and painful is one's grief when one is disappointed. The only means therefore, to escape from both pride and pain is to leave the result to the Will of God, while one is happy in the thought that one has done one's duty with all the dedication and care that one is capable of. (Divine Discourse Sep 10, 1984)
TRANSFORM WORK INTO WORSHIP, AND WORSHIP INTO WISDOM. - BABA
அஹங்கார மனப்பாங்குடனும், சுயநல நோக்கங்களால் உந்தப்பட்டும், சுய முன்னேற்றத்தின் நம்பிக்கைகளால் ஈர்க்கப் பட்டும், ஒரு பணியை ஆற்றும் போது, அது பேராசை மற்றும் தற்பெருமை, பொறாமை மற்றும் த்வேஷத்திற்குத் தீனி போடுகிறது. பின்னர், அது பிணைப்பை இறுக்கி, அதிக லாபம் தரும் வேலை மீது பற்றுதல் உணர்வைப் பேணுகிறது. அந்தப் பணிக்காக தங்களது கரங்களையும், புத்தியையும் தந்தவர்கள் மீதும், அந்த மனிதருக்குத் தேவையான ஆர்வத்தையும், திறமையையும் அளித்த ஆண்டவன் மீதும் கூட நன்றியற்ற உணர்வை வளர்க்கிறது. வேலை வெற்றி பெறும்போது,’’ நான் செய்தேன்’’ என்றும், அது தோல்வி அடையும் போது ‘’ மற்றவர்கள் அதைக் கெடுத்து விட்டார்கள் ‘’ என்றும் ஒருவர் பறைசாற்றிக் கொள்கிறார். பணி, தோல்வியில் முடிந்தால், மனக்கசப்பு, மனச்சோர்வு மற்றும் விரக்தி அதனைத் தொடருகிறது. பலன்களின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் ஆழமாக பற்றுதல் வைக்கிறாரோ, ஒருவர் ஏமாற்றமடையும் போது, அவரது துக்கம் அதை விடத் தீவிரமானதாகவும், வேதனையானதாகவும் ஆகி விடுகிறது. எனவே, ஒருவர், தன்னால் முடிந்த அளவு அர்ப்பணிப்பு மற்றும் கவனத்துடன் தனது கடமையை ஆற்றி விட்டோம் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் போதே, பலன்களை இறைவனது ஸங்கல்பத்திற்கு விட்டு விடுவதே, தற்பெருமை மற்றும் துக்கம் என்ற இரண்டிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழியாகும்.
கர்மாவை, பக்தியாகவும், பக்தியை ,ஞானமாகவும் மாற்றுங்கள்- பாபா