azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Tat Twam Asi – You are the embodiment of the Atma. This is the highest and holiest Mahavakya or divine axiom. You are that indestructible fruit and its inner essence. You are that Atma Tatwa, the Atmic principle which is different from the body and is blemishless. It is for the sake of this Atmic principle alone that you are given this body. You, the Atma, is always steady. Have you come with the body as a vehicle to destroy yourself? Surely not. You are here to exercise authority over the body to thereby promote welfare of the world. The body has to be utilised for this mahat tatwa – great purpose. This body is meant for performing actions; it is a mere implement and instrument gifted by God. Once its intended purpose is served, it is needed no more. Until you have realised your true self, the body has to be protected by all means. (Prema Vahini, Ch 4.)
Be a true servant of the Lord – then, all strength and joy will be added unto you. - Baba
தத் த்வம் அஸி - நீங்கள் ஆத்மாவின் திருவுருவமே. இதுவே மிக உயர்ந்த மற்றும் புனிதமான மஹா வாக்யமாகும். நீங்கள் அந்த அழிக்கமுடியாத பழமும் அதன் உள்ளார்ந்த சாரமும் ஆவீர்கள். உடலிலிருந்து மாறுபட்ட, களங்கமற்ற, அந்த ஆத்ம தத்துவம் நீங்களே. இந்த ஆத்ம தத்துவத்தை உணருவதற்காகவே, உங்களுக்கு இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்மாவான நீங்கள் எப்போதும் நிலையானவர்களே. உடலை ஒரு வாகனமாகக் கொண்டுள்ள நீங்கள், உங்களையே அழித்துக் கொள்வதற்காகவா வந்திருக்கிறீர்கள்? கண்டிப்பாக இல்லை. இங்கு நீங்கள், உங்கள் உடல் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி, அதன் மூலம் உலகின் நலனைப் பேணுவதற்காக வந்துள்ளீர்கள். உடலை, இந்த மஹா தத்வ தலைசிறந்த குறிக்கோளுக்காகப் பயன்படுத்த வேண்டும். இந்த உடல் செயல்களை ஆற்றுவதற்காக ஏற்பட்டது; அது, இறைவனால் பரிசாக அளிக்கப்பட்ட வெறும் ஒரு சாதனமும், கருவியும் ஆகும். ஒருமுறை அதன் பயன்பாட்டு நோக்கம் பூர்த்தி ஆனவுடன், அது அதற்கு மேல் தேவையில்லை. நீங்கள், உங்களது உண்மையான நிலையை உணரும் வரை, உடல் எல்லா விதத்திலும் காப்பாற்றப்பட வேண்டும்.
இறைவனின் ஒரு உண்மையான சேவகனாக இருங்கள்- பின்னர், அனைத்து சக்தியும், சந்தோஷங்களும் உங்களுக்கு அளிக்கப் பட்டு விடும் - பாபா