azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

To battle against the tendency of body identification and to win the grace of God, spiritual exercises such as philosophical inquiry (Tatwa Vicharana), mind and sense control (sama-dama) and other six-fold spiritual disciplines (shat-sampatti) have been laid down. Their practice will ensure the purification of the consciousness; it will then become like a clean mirror that can reflect any object, and the Atma will stand revealed clearly. For the attainment of the highest wisdom (jnana-siddhi), cleansing of the consciousness (chitta-suddhi) is the royal path. For the pure in heart, this is easy to achieve. This is the central truth of the Bharatiya search for the ultimate reality (Paramartha). This is the very vital breath of the teaching. (Sathya Sai Vahini, Ch 1)
REINING IN YOUR SENSES IS A MARK OF GROWING IN WISDOM. - BABA
உடல் பற்று உணர்வை எதிர்த்துப் போராடி, இறை அருளைப் பெறுவதற்கு தத்வ விசாரணை, மனம் மற்றும் புலடனக்கம் ( சமா- தமா) மற்றும் ஆறு விதமான ஆன்மிக சாதனைகள் ( ஷட்- ஸம்பத்தி) ஆகியவை விதிக்கப் பட்டுள்ளன. அவற்றைக் கடைப் பிடிப்பது, சித்தம் பரிசுத்தமாவதை உறுதி செய்யும்; அது பின்னர் எந்தப் பொருளையும் பிரதிபலிக்கும் ஒரு சுத்தமான கண்ணாடிபோல ஆகி விடும்; ஆத்மா தெளிவாக வெளிப்பட்டு விடும். தலைசிறந்த ஞானத்தைப் (ஞான சித்தி) பெறுவதற்கு, சித்தத்தின் பரிசுத்தமே (சித்த சுத்தி) ராஜ பாட்டையாகும். இதயத் தூய்மை உள்ளவர்களுக்கு இதை அடைவது மிகவும் எளிதே. இதுவே, பரமாத்மாவைப் பற்றிய பாரத மக்களின் தேடுதலின் நடு மையைமான உண்மையாகும். இந்த போதனையின் உயிர் மூச்சு இதுவே ஆகும்.
உங்கள் புலன்களைக் கட்டுப் படுத்துவதே,
ஞானத்தின் வளர்ச்சியாகும்- பாபா