azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

It is easy to give up sadhana; it is a task to stick to it. But there is no use climbing just one step; ascend higher and higher, into the purer air. Climb until you see the hills and valleys as one flatness, all the ups and downs as of no concern. You talk as if you have surrendered everything; but when you lose a pen, you report to the police station and rely on the police to recover it for you! You are a hero, a lion in the forest of the world, only when you neither exult nor droop, when good fortune or bad assails you. In order to develop and grow in spiritual practices, you must reduce your wants and discard your wishes. See everything as a disinterested witness; do not plunge and get entangled. When the shackles are loosened, you will feel happy and light. Travel light, even in the journey of life. (Divine Discourse, Oct 09, 1970.
JUST AS FIRE IS NEEDED UNTIL THE RICE IS COOKED, SPIRITUAL PRACTICES
ARE NECESSARY TILL YOU MERGE IN THE DIVINE. - BABA
ஆன்மிக சாதனையை விட்டு விடுவது சுலபம்; அதை விடாமல் செய்வது ஒரு கடினமான பணியே. ஆனால், ஒரே ஒரு படி மட்டும் ஏறுவதால் எந்தப் பயனும் இல்லை; மேலும் மேலும் உயர்ந்து கொண்டே, பரிசுத்தமான காற்று வரை செல்லுங்கள். மலைகளும், பள்ளத் தாக்குகளும் ஒரே சமமான தரையைப் போலத் தெரியும் அளவும், அனைத்து உயரங்களும்,தாழ்வுகளும் ஒரு பொருட்டுள்ள எனும் வரையிலும், உயர ஏறிச் செல்லுங்கள். எல்லாவற்றையும் அர்ப்பணித்து சரணாகதி அடைந்து விட்டதைப் போல நீங்கள் பேசுகிறீர்கள்; ஆனால் , நீங்கள் ஒரு பேனாவைத் தொலைத்து விட்டால், காவல் நிலையத்தில் அறிவித்து, அதைத் திரும்பப் பெறுவதற்கு போலீஸை நம்புகிறீர்கள் ! நல்ல அதிருஷ்டமோ அல்லது கெட்டதோ உங்களுக்கு ஏற்படும் போது, நீங்கள் குதூகலம் அடையாமலோ அல்லது குமைந்து விடாமலோ இருந்தால் மட்டும் தான், உலகம் எனும் காட்டில் நீங்கள் ஒரு சிங்கமாக, ஒரு ஹீரோவாக இருப்பீர்கள். ஆன்மிக சாதனைகளில் நீங்கள் அபிவிருத்தி அடைந்து வளருவதற்கு. நீங்கள் உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, ஆசைகளை விட்டு விட வேண்டும். அனைத்தையும், ஒரு ஆர்வமற்ற சாட்சி போலக் காணுங்கள்; அவற்றுள் குதித்து, சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களைப் பிணைக்கும் சங்கிலிகள் தளர்ந்து விட்டால், நீங்கள் சந்தோஷமாகவும், சுமையின்றியும் இருப்பீர்கள். வாழ்க்கைப் பயணத்திலும் கூட, பளுவின்றி பயணியுங்கள்.
எவ்வாறு அரிசி சமைக்கப் படும் வரை, நெருப்பு தேவையோ, அவ்வாறே நீங்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் வரை ஆன்மிக சாதனைகள் தேவை- பாபா