azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Frustration is caused by wrong diagnosis of the root-cause of suffering. By massaging one’s head, can you relieve an excruciating pain in the stomach? Delay does not matter; discover the real root of the trouble and then do the remedy. The real reason for all troubles is attachment and illusion. Married couples think they will be happy when they get a child; but that is just the beginning of a series of worries! They worry about the child’s health, habits, schooling, friends, marriage, career prospects and so on, in an endless chain. The mind multiplies the roots of worry, anxiety and grief. Cultivate detachment, not attachment. Dwell on the great heritage of humankind; then, you will give up attachment and not engage yourself in low thoughts, words or deeds! Contemplate on Dharma, Sathya and Prema (Righteousness, Truth and Love) which are the foundations of humanity and that will guide all your actions to be righteous. (Divine Discourse, Nov 6, 1967)
EVERYTHING HAS A PRICE. THE PRICE TO BE PAID
FOR ENDURING HAPPINESS IS DIVINE LOVE. - BABA
துன்பத்தின் மூல காரணத்தைத் தவறாக கணிப்பதனால், விரக்தி ஏற்படுகிறது. ஒருவரது தலையை உருவி விடுவதால், வயிற்றில் இருக்கும் கொடிய வலியை உங்களால் தீர்க்க முடியுமா? தாமதமானால் பரவாயில்லை; துன்பத்தின் மூல காரணத்தைக் கண்டு பிடித்து அதன் பின் நிவாரணம் அளியுங்கள். அனைத்து துன்பங்களுக்கும் உண்மையான காரணம் பற்றுதலும், மாயையுமே. திருமணமான தம்பதிகள், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைக்கிறார்கள்; ஆனால் அதுதான், ஒரு கவலைகளின் தொடர்ச்சியின் ஆரம்பம்! அவர்கள், குழந்தையின் ஆரோக்யம், பழக்கங்கள், பள்ளிப்படிப்பு, நண்பர்கள், திருமணம், வேலை வாய்ப்புக்கள் என்ற ஒரு முடிவே இல்லாத சங்கிலித் தொடர் போலக் கவலைப் படுகிறார்கள். மனம், கவலை, கலக்கம் மற்றும் துக்கத்தின் வேர்களைப் பெருக்கிக் கொண்டே போகிறது. பற்றுதல் அல்லாது, பற்றின்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். மனித குலத்தின் தலைசிறந்த பாரம்பரியத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்; பின்னர் ,நீங்கள் பற்றுதலை விடுத்து, கீழ்த்தரமான சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களில் ஈடுபட மாட்டீர்கள்! மனித குலத்தின் அஸ்திவாரங்களான தர்மம், சத்யம் மற்றும் ப்ரேமை ஆகியவற்றை தியானியுங்கள்;அது உங்களது அனைத்து செயல்களும் தார்மீகமாக இருக்குமாறு வழி நடத்தும்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு.நிரந்தரமான சந்தோஷத்திற்குக் கொடுக்க வேண்டிய விலை தெய்வீக ப்ரேமையே- பாபா