azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Individuals are integrally related to society like different organs in a body. Humanity is a limb of nature and nature (Prakruti) is a limb of God. If this integral relationship is understood, where is the ground for hatred? None should consider themselves as insignificant or unimportant. Everyone, small or big, is a vital part of the whole and is essential for its proper functioning like all parts in a rocket. Any small defective part may cause the rocket to explode. Likewise, in this vast Cosmos every being has a significant role to play to ensure its smooth functioning. Anyone can pursue the spiritual path without the aid of a rosary or taking to the forest. For example, a farmer tilling the field should think that he is tilling the field of his heart. While sowing seeds, he must think that he is sowing the seeds of good qualities in his heart and while watering, he should think he is watering the field of his heart with love. (Divine Discourse, Nov 23, 1992)
JUST AS WHOLESOME FOOD GIVES HEALTH AND STRENGTH TO THE BODY,
PRAYER PURIFIES THE MIND AND STRENGTHENS THE SPIRIT. - BABA
ஒரு உடலின் வெவ்வேறு அங்கங்களைப் போல, தனி மனிதர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணைந்தவர்கள்.மனித குலம் இயற்கையின் ஒரு அங்கம் ; இயற்கை ( ப்ரக்ருதி) இறைவனின் ஒரு அங்கம். இந்த ஒன்றிணைந்த உறவைப் புரிந்து கொண்டு விட்டால், த்வேஷத்திற்கு இடமேது? எவரும் தங்களை அற்பமானவர்கள் அல்லது முக்கியத்துவம் இல்லாதவர்கள் என்று கருதக் கூடாது. ஒவ்வொருவரும், சிறியவரோ அல்லது பெரியவரோ, முழுமையின் ஒரு இன்றியமையாத பகுதியே; ஒரு ராக்கெட்டின் அனைத்து உறுப்புக்களைப் போல, முறையாகச் செயல்படுவதற்கு அத்தியாவசியமானவரே. எந்த ஒரு சிறிய பழுதான பகுதியும், ராக்கெட் வெடித்துச் சிதறுவதற்குக் காரணமாக அமைந்து விடக் கூடும். அதைப் போல, இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் சுமுகமான செயல்பாட்டில், ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்கு உள்ளது. ஒரு ஜபமாலையின் துணையின்றியோ அல்லது காட்டிற்குச் செல்லாமலோ, எவரும் ஆன்மிகப் பாதையைப் பின்பற்றலாம். உதாரணமாக, ஒரு நிலத்தை உழும் விவசாயி, அவன் தனது இதயம் எனும் நிலத்தை உழுவதாக எண்ண வேண்டும். விதைகளை விதைக்கும் போது, அவன் தனது இதயத்தில் நற்குணங்களின் விதைகளை விதைப்பதாக எண்ண வேண்டும்; நீர் பாய்ச்சும்போது, அவன் தனது இதயம் எனும் நிலத்தில் ப்ரேமை எனும் நீரைப் பாய்ச்சுவதாக எண்ண வேண்டும்.
எப்படி ஒரு பரிபூரணமான உணவு, உடலுக்கு ஆரோக்கியத்தையும், வலிமையையும் அளிக்கிறதோ, அவ்வாறே, பிரார்த்தனை மனதைப் பரிசுத்தப் படுத்தி, ஆத்மாவை வலுப்படுத்துகிறது - பாபா