azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 19 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 19 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Men in positions should discharge their duties commensurate with the salaries received. Women have been setting an example in this regard. Women are more determined, dedicated and devoted to their work at home and offices as compared to men. In countries like Malaysia, Singapore, Japan, Germany, etc., women are practising human values more than men. They are following Swami’s command under all circumstances. There are crores and crores of such sincere workers in the world. They are striving not for name and fame but for Swami’s love and grace. This proves that they received Swami’s teachings in its correct spirit. Embodiments of Love! Cultivate selfless love, take care of your health, and serve the society. Then God will confer on you the necessary strength and happiness. When God can make the dumb speak and the lame ascend mountains, why will He forsake those who are sincere and hardworking? (Divine Discourse, Nov 20, 1998)
PRACTICE THE ATTITUDE OF OFFERING EVERY ACT AT THE FEET OF GOD
AS A FLOWER IS OFFERED IN WORSHIP. - BABA
பதவிகளில் உள்ள ஆண்கள் தங்களது கடமைகளை பெறும் ஊதியத்திற்கு ஏற்ப ஆற்ற வேண்டும்.இந்த விஷயத்தில் பெண்கள் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்கள். ஆண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது,பெண்கள் தங்களது இல்லம் மற்றும் அலுவலகப் பணிகளில், அதிக மன உறுதி, அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் சிரத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில், பெண்கள், ஆண்களை விட, மனிதப் பண்புகளை அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் சுவாமியின் கட்டளையை எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுகிறார்கள். இப்படிப் பட்ட சிரத்தையான பணியாளர்கள் கோடிக்கணக்கில் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்கள், பெயர் மற்றும் புகழுக்காக அன்றி, சுவாமியின் ப்ரேமை மற்றும் அருளுக்காகப் பாடுபடுகிறார்கள். இதுவே அவர்கள் சுவாமியின் போதனைகளை அவற்றின் சரியான சாரத்துடன் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. ப்ரேமையின் திருவுருவங்களே ! தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொண்டு,உங்கள் ஆரோக்யத்தைப் பேணி, சமுதாயத்திற்கு சேவை ஆற்றுங்கள். பின்னர் இறைவன் உங்களுக்குத் தேவையான சக்தியையும், சந்தோஷத்தையும் அளிப்பான். ஊமையைப் பேச வைத்து, முடவனை மலை ஏறச் செய்ய வல்ல இறைவன் சிரத்தையாகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பவரை ஏன் கை விடப் போகிறான் ?
வழிபாட்டில் ஒரு மலரை இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல,ஒவ்வொரு செயலையும் இறைவனது பாத கமலங்களில் அர்ப்பணிக்கும் மனப்பாங்கினைக் கடைப்பிடியுங்கள்- பாபா