azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The eighth flower God loves dearly is satyam (truth), that which is unmodified by the passage of time. God alone persists unchanged from the past, through the present into the future. When this flower blossoms in your heart you will be rewarded with eternal fragrance. Worship the Lord, offering these eight flowers of Nonviolence, sense-control, compassion, tolerance, inner peace, austerity, meditation and truth, blossoming from your heart! Today, you offer fresh flowers, and your devotion does not last even until you exit the shrine! As soon as you finish worship, anger, hatred and anxiety possess you and degrade you. Without developing virtuous qualities how can any one win the grace of God? Engaged in Asatya Narayana Vrata (a vow of falsehood) on all 364 days, what is the good you hope to get doing Satya Narayana Vrata on one day? When you claim to be Sai devotees, justify the claim by cultivating these flowers of virtue and offering them to God. (Divine Discourse, 6-Oct-1981)
VIRTUE IS THE SALT OF LIFE. – BABA
இறைவன் மிகவும் விரும்பும் எட்டாவது மலர் காலத்தால் மாற்றம் அடையாத சத்யமே.இறைவன் மட்டுமே கடந்த காலம்,நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் மாற்றம் இன்றி இருப்பவன். இந்த மலர் உங்கள் இதயத்தில் மலரும் போது, உங்களுக்கு நிரந்தரமான நறுமணம் கிடைக்கும். உங்கள் இதயத்தில் மலருகின்ற இந்த எட்டு மலர்களான அஹிம்ஸை, புலடனக்கம், பரிவு, சகிப்புத் தன்மை, அகச்சாந்தி, தவம், தியானம் மற்றும் சத்யம் ஆகியவற்றால், இறைவனை ஆராதியுங்கள்! இன்று நீங்கள் புத்தம் புதிய மலர்களை அர்ப்பணிக்கிறீர்கள்; உங்களது பக்தி, நீங்கள் அந்த ஆலயத்தை விட்டு வெளியில் செல்லும் வரைக்கும் கூட இருப்பதில்லை! நீங்கள் ஆராதனையை முடித்த உடனேயே, கோபம், த்வேஷம் மற்றும் கவலை ஆகியவை உங்களை ஆக்ரமித்து, உங்களைத் தாழ்த்தி விடுகிறது. நற்குண சீலங்களை அபிவிருத்தி செய்து கொள்ளாமல், எப்படி ஒருவர் இறைவனது அருளைப் பெற முடியும்? வருடத்தின் 364 நாட்களும் அசத்ய நாராயண விரதத்தில் (பொய்மையின் விரதம்) ஈடுபட்டு விட்டு, ஒரே ஒரு நாள் சத்ய நாராயண விரதத்தைச் செய்வதால் என்ன நல்லதைப் பெற முடியும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? எப்போது நீங்கள் சாய் பக்தர்கள் என்று கூறிக் கொள்கிறீர்களோ, அப்போதே இந்த நல்லொழுக்க மலர்களை வளர்த்து, அவற்றை இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், அந்தக் கூற்றை நியாயப்படுத்துங்கள்.
நல்லொழுக்கமே வாழ்க்கையின் சாரமாகும்- பாபா