azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of love! Bharat is the centre of truth, righteousness and morality; of merit, penance and sacrifice (tyaga), and is endowed with the wealth of spirituality and bliss. It is your great good fortune to have been born in this sacred land. Dear Children, you must all live up to the reputation of muddu biddalu (dear children) of your motherland. Do not become moddu biddalu (foolish children) or chedda biddalu (bad children). Your motherland will feel proud of you only when you become noble and ideal. You must resolve to foster spiritual values and the spirit of sacrifice. Consider service as your duty. Service is God. Divinity can be experienced only through service. On deep enquiry, you will know that you are in God, God is in you and you are God. You should be able to understand and act with conviction that you are a spark of the Divine! (Divine Discourse, Jan 14, 2000)
BEND THE BODY, MEND THE SENSES AND END THE MIND—
THIS SHOULD BE YOUR ENDEAVOR! - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! பாரத தேசம் சத்யம், தர்மம் மற்றும் சீலத்தின் மையம்; இதுவே புண்ய பூமி,யோக பூமி, தியாக பூமியும் ஆகும் ; ஆன்மிகம் மற்றும் ஆனந்தத்தின் செல்வம் கொண்டதும் ஆகும். இந்த புனித தேசத்தில் பிறந்திருப்பது உங்களது மகத்தான அதிருஷ்டம். அன்பான குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்களது தாய் நாட்டின் புகழுக்கு ஏற்ப முத்து பிட்டலு (அன்பான குழந்தைகள்) ஆக வாழ வேண்டும். மொத்து பிட்டலுவாகவோ (முட்டாள் குழந்தைகள்) அல்லது செட்ட பிட்டலுவாகவோ (தீய குழந்தைகள்) ஆகி விடாதீர்கள். நீங்கள் சீரியவர்களாகவும், இலட்சிய மனிதர்களாகவும் ஆனால் மட்டுமே, உங்களது தாய் நாடு உங்களைப் பற்றிப் பெருமைப் படும். ஆன்மிகப் பண்புகளையும், தியாக உணர்வையும் பேணிக் காப்போம் என நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். சேவையை உங்கள் கடமையாகக் கருதுங்கள். சேவையே இறைவன். சேவையின் மூலம் மட்டுமே தெய்வீகத்தை அனுபவிக்க முடியும். ஆழ்ந்து ஆராயும் போது, நீங்கள் இறைவனுள் இருக்கிறீர்கள், இறைவன் உங்களுள் இருக்கிறார்; நீங்களே இறைவன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் இறைவனின் ஒரு ஒளிக் கதிரே என்பதைப் புரிந்து கொண்டு, அந்த நம்பிக்கையுடன் செயல் படுங்கள்!
உடலை வளைத்து,புலன்களைத் திருத்தி, மனதை முடியுங்கள்-
இதுவே உங்களது முயற்சியாக இருக்க வேண்டும்- பாபா