azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Divine Love! When you chant the divine name with love at least once, you will experience inexplicable and overwhelming bliss in your heart. The divine name melts even a stone-hearted person. Even ice takes time to melt, but God's heart melts instantaneously when you chant His name with love. So chant the Lord’s name. Even while you are traveling, you must chant His name silently without attracting others' attention. Everywhere, at all times and under all circumstances, you must contemplate on the divine name of God (Sarvada sarva kaleshu sarvatra Rama chintanam). There is no greater spiritual exercise than this. The essence of all spiritual practices is contained in chanting Lord’s name incessantly. In Kali yuga, chanting God's Divine name is the only royal path to attain liberation. Develop noble feelings; contemplate on God with full faith that He will grant you everything you need. I bless you to lead your life with love, peace and happiness! (Divine Discourse, Apr 14, 2003)
TO GAIN LIBERATION, TO WIN RAMA’S GRACE, IT IS NOT ENOUGH TO REPEAT HIS NAME;
YOU HAVE TO PRACTISE THE RAMA PRINCIPLE. - BABA
தெய்வீக ப்ரேமையின் திருவுருவங்களே! இறைவனது திருநாமத்தை நீங்கள் ஒருமுறையாவது உச்சரித்தாலும், நீங்கள் விவரிக்கமுடியாத, முழுமையாக ஆட்கொள்ளும், ஆனந்தத்தை உங்கள் இதயத்தில் அனுபவிப்பீர்கள்.தெய்வீகத் திருநாமம் ஒரு கல்நெஞ்சக்காரனைக் கூட உருக வைக்கும்.பனி கூட உருகுவதற்கு சில நேரம் பிடிக்கும்; ஆனால், நீங்கள் அவனது திருநாமத்தை ப்ரேமையுடன் உச்சரித்தவுடனேயே இறைவனது இதயம் உருகி விடும். எனவே, இறைவனது திரு நாமத்தை உச்சரியுங்கள்.நீங்கள் பிரயாணம் செய்யும் போதும் கூட, பிறரது கவனத்தை ஈர்க்காதவாறு, அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். எங்கும், எப்போதும்,எல்லா சந்தர்ப்பங்களிலும், நீங்கள் இறைவனது திருநாமத்தை தியானிக்க வேண்டும். ( ஸர்வதா ஸர்வ காலேஷூ ஸர்வத்ர ராம சிந்தனம் ). இதை விடச் சிறந்த ஆன்மிக சாதனை வேறு எதுவும் இல்லை. இறைவனது திருநாமத்தை இடையறாது உச்சரிப்பதில் தான் அனைத்து ஆன்மிக சாதனைகளின் சாரம் அடங்கியுள்ளது. கலியுகத்தில், இறைவனது தெய்வீக நாமஸ்மரணை மட்டுமே, மோக்ஷத்திற்கான ராஜபாட்டையாகும். சீரிய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குத் தேவையானதை எல்லாம் அளிப்பான் என்ற முழு நம்பிக்கையில் இறைவனை தியானியுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை ப்ரேமை, சாந்தி மற்றும் சந்தோஷத்துடன் நடத்த வேண்டும் என நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன் !
ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதற்கும் ஸ்ரீராமரின் அருளைப் பெறுவதற்கும், அவரது திருநாமத்தை ஜபித்தால் மட்டும் போதாது ; ஸ்ரீராம தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - பாபா