azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The power of divine name is unparalleled. People often take it lightly. They mistake a shining glass piece to be a diamond. The real diamond is very different! What is that ‘real diamond’? ‘Die mind’ - God’s name is the real diamond! So, keep it safe and secure and seek refuge at the Lotus Feet of the Lord! You are most fortunate to participate in Akhanda Bhajan. It is a great opportunity. Never miss the opportunity of participating in Bhajans. If only you make good use of it, your life will be sanctified. Once you seek refuge in Him, never give it up. Wherever you go, the divine feet will protect you! Install the divine name firmly in your heart, your life will become sanctified. That is devotion (Bhakti). That is your power (Shakti). That is liberation (Mukti). The Global Akhanda Bhajan is held every year to remind you and rekindle this spirit! (Divine Discourse, Nov 13, 2007)
TO EXPERIENCE THE PROXIMITY OF THE DIVINE THE EASIEST PATH IS NAMASMARANA, REMEMBERING CONSTANTLY THE NAME OF THE LORD. - BABA
இறைவனது திருநாமத்தின் சக்திக்கு ஈடு இணையே இல்லை. மக்கள் அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பளபளக்கும் கண்ணாடித் துண்டை வைரம் எனத் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். உண்மையான வைரம் மிகவும் வித்தியாசமானது ! அந்த ‘’ உண்மையான வைரம் ( DIAMOND )” என்பது எது ? ‘’ DIE MIND “( மனம் மரணமடைவதே )- இறைவனது திருநாமமே உண்மையான வைரம் ஆகும் ! எனவே, அதைப் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டு, இறைவனது பொற்பாத கமலங்களில் சரணடையுங்கள். அகண்ட பஜனையில் பங்கேற்கும் நீங்கள் அதிருஷ்ட சாலிகள். இது ஒரு மகத்தான வாய்ப்பு.பஜனைகளில் பங்கேற்கும் வாய்ப்பினை ஒருபோதும் நழுவ விடாதீர்கள். நீங்கள் அதை மாத்திரம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் வாழ்க்கை புனிதமாகி விடும். ஒரு முறை நீங்கள் இறைவனிடம் சரணடைந்து விட்டால், அதை ஒரு போதும் விட்டு விடாதீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் இறைவனது திருப்பாதங்கள் உங்களைக் காக்கும்! இறைவனது திருநாமத்தை இதயத்தில் உறுதியாகப் பிரதிஷ்டை செய்து விடுங்கள்; உங்கள் வாழ்க்கை புனிதமாகி விடும். அதுவே பக்தி. அதுவே உங்களின் சக்தி. அதுவே முக்தியும் கூட. அகில உலக அகண்ட பஜன் ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு இதை நினைவூட்டி, இந்த உணர்வை மீண்டும் தூண்டி விடுவதற்காக நடத்தப் படுகிறது.
இறைநாமத்தை,இடையறாது நினைவு கூறும், நாமஸ்ரணையே , இறைவனது அருகாமையை அனுபவிப்பதற்கான மிகவும் எளிதான வழியாகும் - பாபா