azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Tests are evidences of grace rather than of anger. The terrible aspect of God is not terrible in essence. God is described as Raso vai sah - He is sweetness Itself. How can sweetness ever become bitter? Godhead is a spotlessly clean mirror; you see in it your own reflection. When you have terror-striking propensities, the reflection you see strikes terror into you. When you have soft harmless propensities, the reflection will be tender and soft. Do not cast blame on Godhead, as most people do. When everything goes right, you say God is very close to you; when something goes wrong, you say God has deserted you and gone afar! He never moves far or near. The distance from Him to you is the exact same distance from you to Him. He is everywhere. He is always in your heart. Recognise Him there; realise Him as closest and nearest to you. He is your own Self, neither terrible nor tender, but simply ‘is’. - Divine Discourse, May 30, 1974.
YOU MUST WELCOME TESTS BECAUSE IT GIVES YOU CONFIDENCE AND ENSURES PROMOTION. - BABA
சோதனைகள், கோபத்தால் அல்லாது இறை அருளின் அத்தாட்சிகளே. இறைவனின் அச்சுறுத்தும் அம்சம், சாரத்தில் பயங்கரமானதே அல்ல. இறைவன், வேதங்களில், ‘’ ரஸோ வை ஸஹ – அவனே இனிமையான சாரம் ‘’ என்று வர்ணிக்கப் படுகிறான். இனிமை என்பது எவ்வாறு கசப்பாக முடியும்? இறைத் தன்மை என்பது ஒரு அப்பழுக்கற்ற தெளிவான கண்ணாடி போன்றதாகும். நீங்கள் உங்களையே அதில் பிரதிபிம்பமாகக் காண்கிறீர்கள். உங்களிடம் அச்சுறுத்தும் தன்மைகள் இருந்தால், நீங்கள் காணும் பிரதிபிம்பமும், உங்களை பயமுறுத்தும். உங்களிடம் மிருதுவான மற்றும் தீங்கற்ற தன்மைகள் இருக்குமானால்,பிரதிபிம்பமும் மிருதுவாகவும், இதமாகவும் இருக்கும். பல மனிதர்கள் அடிக்கடி செய்ய முற்படுவது போல, இறைவனின் மீது பழி போடாதீர்கள்! அனைத்தும் சரியாக நடக்கும் போது, நீங்கள் இறைவன் உங்கள் அருகில் வந்து விட்டான் என்கிறீர்கள்; ஏதாவது தவறாகி விட்டால், இறைவன் உங்களை கை விட்டு விட்டு, வெகு தொலைவில் சென்று விட்டான் என்கிறீர்கள் ! அவன் வெகு தொலைவிற்கோ அல்லது அருகிலோ செல்வது இல்லை.அவனுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம், உங்களுக்கும், அவனுக்கும் இடையில் உள்ள தூரமே.அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். அவன் உங்கள் இதயத்திலேயே உறைகிறான்.அவனை அங்கேயே இனம் கண்டு, உங்களுக்கு மிகவும் நெருக்கமானவனாகவும் அருகாமையில் உள்ளவனாகவும் உணருங்கள். உங்களது சொந்த ஆத்மாவே அவன்; கொடியவனும் அல்ல, மென்மையானவனும் அல்ல; ஆனால் அவன் அவனே.
நீங்கள் பரீட்சைகளை வரவேற்க வேண்டும்; ஏனெனில் அவை உங்களுக்குத் தன்னம்பிக்கை அளித்து, முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன- பாபா