azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Navarathri is celebrated in commemoration of the victory of Daivatwam (Divinity) over Danavatvam (demons) through the intercession of the Mahashakti as Chandi, Durga and Kali. Deepavali commemorates the victory of heavenly over hellish influences; of virtue over vice as symbolised by the victory of Krishna-Satyabhama over Narakasura; of the upward pull into heaven and the drag down into hell. Sathya or Truth will always defeat the forces of falsehood. That is the inner significance of Satyabhama being the instrument which the Lord used to destroy Narakasura. When Narakasura was destroyed, implying, when the six foes of human beings (lust, anger, greed, infatuation, pride and jealousy) which drag them towards a fall are overpowered, the flame of wisdom will shine clearly, bright and beautiful. It is to demonstrate this truth that on Deepavali day, deepas or lamps are lit and arranged in every house, dispelling darkness which is the home of evil and vice. -Divine Discourse, Nov 11, 1966
PRACTICE THE VOCABULARY OF LOVE – UNLEARN
THE LANGUAGE OF HATE AND CONTEMPT. - BABA
மஹாசக்தியை, சண்டி, துர்க்கா மற்றும் காளியாகக் கொண்டு, தானவத்துவத்தின் ( அசுரர்கள் ) மீது தெய்வத்துவம் ( தெய்வீகம்) பெற்ற வெற்றியின் நினைவாகக் கொண்டாடப் படுவதே நவராத்ரியாகும். நரகத்தின் சக்திகளின் மீது ஸ்வர்கத்தின் சக்திகள் பெற்ற வெற்றி,ஸ்ரீகிருஷ்ண -சத்யபாமா நரகாசுரன் மீது பெற்ற வெற்றி குறிப்பிடும் தீய குணங்கள் மீது நல்லொழுக்கம் பெற்ற வெற்றி , மேல் நோக்கி ஸ்வர்கத்திற்குள் இழுக்கப் படுவது மற்றும் கீழ் நோக்கி நரகத்தில் தள்ளப் படுவது ஆகியவற்றின் ஞாபகார்த்தமே தீபாவளியாகும். பொய்மையின் சக்திகளை, சத்தியம் அல்லது உண்மை எப்போதும் தோற்கடிக்கும். பகவான் நரகாசுரனை அழிப்பதில் சத்யபாமா ஒரு கருவியாக இருந்ததன் உட்கருத்து இதுவே. எப்போது நரகாசுரன் அழிக்கப் பட்டானோ, அதாவது, எப்போது மனிதர்களை ஒரு வீழ்ச்சிக்கு இழுத்துச் செல்லும் அவர்களின் ஆறு எதிரிகள் ( காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யம் ) வெல்லப் படுகிறார்களோ. அப்போது தான் ஞானம் எனும் ஜோதி தெளிவாகவும், பிரகாசமாகவும், எழிலாகவும் ஒளி வீசும். இந்த சத்தியத்தை எடுத்துக் காட்டுவதற்காகவே, தீபாவளி தினத்தன்று, தீமை மற்றும் துர்குணங்களின் இருப்பிடமான இருளை நீக்கும் தீபங்கள் அல்லது விளக்குகள் ஏற்றப் பட்டு, ஒவ்வொரு இல்லத்திலும் வரிசையாக வைக்கப் படுகின்றன.
ப்ரேமையின் பரிபாஷையைக் கடைப்பிடியுங்கள்;த்வேஷம் மற்றும் இகழ்ச்சியின் பாஷையை நினைவிலிருந்து நீக்குங்கள். - பாபா