azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

If you stare at the sun for a second and then turn your eye to other things around, you will find that there is a dark patch over them, and you cannot recognise them. Similarly, once you get a vision of God, who is more effulgent than a thousand suns, you can no longer recognise the multiplicity called nature (prakriti). The world is black, it is blocked; indeed, you can no longer recognise or deal with variety once you have had a vision of the basic Unity. Take the screen in the cinema theatre. When the film is on, you do not see the screen, you see only the play. When the show is over, you see just a screen, a screen that has no message — neither voice nor name nor form nor colour nor creed. The entire screen was lost in the picture. The screen is Brahman. Brahman is Truth (Satyam); the Universe is Brahman. That is Being (Sat); this is Awareness (Chit). Knowing this and dealing with both is Bliss (Anandam). (Divine Discourse, Oct 22, 1961)
DO NOT CULTIVATE THE CONVICTION THAT YOU ARE MERELY HUMAN;
BE ASSURED THAT YOU ARE DESTINED FOR DIVINITY. - BABA
நீங்கள் ஒரு நொடி, சூரியனை உற்றுப் பார்த்து விட்டு, உங்கள் கண்ணை, சுற்றி உள்ள மற்றப் பொருட்களை நோக்கித் திருப்பினால், அவைகளின் மீது ஒரு கருப்பான ஒரு பரப்பு இருப்பதைக் காண்பீர்கள்; மேலும் உங்களால் அவற்றைக் காண இயலாது.அதைப் போலவே,ஒரு ஆயிரம் சூரியன்களை விட அதிகப் பிரகாசமான இறைவனது தரிசனம் ஒருமுறை உங்களுக்குக் கிடைத்து விட்டால், உங்களால், அதற்குப் பிறகு பலவாறாக உள்ள இயற்கையைக் காண முடியாது. இந்த உலகமே கருப்பானது; அது மறைக்கப் பட்டு விடுகிறது; உண்மையில், ஒரு முறை, அடிப்படை ஒருமையின் ஒரு தரிசனம் உங்களுக்குக் கிடைத்து விட்டால், அதற்குப் பிறகு, வேற்றுமையைக் காணவோ அல்லது அதைக் கையாளவோ உங்களால் முடியாது. ஒரு சினிமா அரங்கில் உள்ள திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.சினிமா திரையிடப்படும்போது, நீங்கள் திரையைக் காண முடிவதில்லை, நீங்கள் அந்தக் காட்சியை மட்டுமே காண்கிறீர்கள்.காட்சி முடிந்தவுடன், எந்த செய்தியோ இல்லாத- குரலோ அல்லது பெயரோ அல்லது ரூபமோ அல்லது நிறமோ அல்லது இனமோ அற்ற வெறும் ஒரு திரையைத் தான் நீங்கள் காண்கிறீர்கள். திரை முழுவதும் காட்சியில் காணாமல் போய் விட்டது. அந்தத் திரையே பரப்ரம்மன். பரப்ரம்மனே சத்யம்; இந்த பிரபஞ்சமே பரப்ரம்மன். அதுவே சத் மற்றும் சித். இதை அறிந்து கொண்டு அவை இரண்டையும் கையாளுவதே ஆனந்தம்.
நீங்கள் வெறும் மனிதன் தான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்; நீங்கள் தெய்வீகத்தை அடைவீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்- பாபா