azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Study of the scriptures can reinforce the spiritual urges already in you and induce you to practise the precepts. Don’t treat the learning you derive from them as so much fodder for the brain. It must be sublimated into bliss (ananda) for the individual. Envy, pompousness, egotism — such evil traits have to be driven out of the individual. The source for wisdom is the Guru, the soul (Purusha) latent in you. This spiritual treasure can be obtained from others too. However, the giver has to possess supreme attainment, and the recipient has to possess the special merit that deserves the achievement. The seed may have life in it, but the soil must be ploughed and made fit to activate it. When both conditions are satisfied, the harvest of spiritual success is assured. Remember, the real guru steals your heart, not your wealth! (Sathya Sai Vahini, Chapter 13)
WHEN THE HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES. - BABA
சாஸ்திரங்களைப் படிப்பது, உங்களுள் முன்பே இருக்கும் ஆன்மீக உந்துதல்களை வலுப்படுத்தி, உங்களை அவற்றின் நியமங்களைக் கடைப்பிடிக்கும்படித் தூண்டும்.அவற்றிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் படிப்பினையை, மூளைக்குத் தீனி போலக் கருதாதீர்கள். அது தனி மனிதனுக்கு, ஆனந்தமாக, மேம்பாடு அடைய வேண்டும்.அசூயை, ஆடம்பரம், அஹங்காரம் இப்படிப் பட்ட தீய இயல்புகள், ஒருவரிடமிருந்து விரட்டி அடிக்கப் பட வேண்டும். ஞானத்திற்கான மூலாதாரம் உங்களுள் பொதிந்திருக்கும் குருவான, ஆத்மாவே (புருஷா). இந்த ஆன்மீகப் பொக்கிஷத்தை மற்றவர்களிடமிருந்தும் கூடப் பெற முடியும். ஆனால், அதைத் தருபவர், தலைசிறந்த சாதனையை அடைந்திருக்க வேண்டும்; அதைப் பெறுபவர் அந்த சாதனைக்குத் தகுதி உள்ள தனித்தன்மையான யோக்கியதையைப் பெற்றிருக்க வேண்டும். விதையில் உயிர் இருக்கலாம்; ஆனால், அதை ஊக்குவிப்பதற்கு, நிலம் உழப்பட்டு, தகுதி உள்ளதாக ஆக்கப் பட வேண்டும். எப்போது இந்த இரண்டு சூழ்நிலைகளும் திருப்தியாக உள்ளனவோ, அப்போது, ஆன்மீக வெற்றி உறுதிப் படுத்தப் படுகிறது. உண்மையான குரு உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்கிறாரே அன்றி,உங்கள் செல்வத்தை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
இதயம் பரிசுத்தமாக இருக்கும்போது, ஞானம் எனும்
ஜோதி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. - பாபா