azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Bhajans always gives bliss and peace. See that it is not used for increasing your egoism, or mutual recrimination, or envy or pride, as very often happens. Be humble, be calm, be tolerant. Cooperate with all and treat everyone with courtesy and kindness. Devotion is not a uniform to be worn on Thursday evenings, when you gather for bhajans, and to be laid aside when the bhajans are over. It must mean the promotion of an attitude of humility, of revering parents, teachers, elders, and others; it is a mental outlook, an attitude that is ever-present. It is the sustenance of the heart, just as food is sustenance for the body. Like the needle of the compass always pointing to the north, never deviating from that direction, and returning to it, readily, gladly, quickly, whenever it is shaken off that line, so too the devotee must face the Lord ever, must be happy only when he is focused on Him. (Divine Discourse, Dec 15, 1963)
BODY IS A HOUSE GIVEN TO YOU ON RENT. LIVE THERE SO LONG AS HE WILLS,
THANKING HIM AND PAYING HIM THE RENT OF FAITH AND DEVOTION. - BABA
பஜனைகள் எப்போதும் ஆனந்தத்தையும்,சாந்தியையும் அளிக்கின்றன. அடிக்கடி நடப்பதைப் போல, அது உங்களது அஹங்காரம், அல்லது பரஸ்பர குறை கூறுதல் அல்லது பொறாமை அல்லது தற்பெருமை ஆகியவற்றை அதிகரிப்பதற்கு பயன்படுத்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பணிவாகவும், அமைதியாகவும், சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருங்கள். அனைவருடனும் ஒத்துழைத்து, ஒவ்வொருவரையும் மரியாதையுடனும், பரிவுடனும் நடத்துங்கள். பக்தி என்பது, வியாழக்கிழமை மாலைகளில், நீங்கள் பஜனைக்காகக் கூடும்போது அணிந்து கொண்டு, பஜனை முடிந்தவுடன் கழட்டி ஓரத்தில் வைத்து விடும் ஒரு சீருடை போன்றதல்ல. ஒரு பணிவு மனப்பாங்கு மற்றும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் பிறரை மதிக்கும் மனப்பாங்கு ஆகியவற்றைப் பேணும் பொருள் கொண்டதாக அது இருக்க வேண்டும்; அது ஒரு மனக்கண்ணோட்டம், நிரந்தரமான ஒரு மனப்பாங்காகும். உணவு எவ்வாறு உடலுக்கான வாழ்வாதாரமோ, அவ்வாறே இது இதயத்திற்கான வாழ்வாதாரமாகும். எவ்வாறு திசைகாட்டியின் முள் எப்போதும் வட திசையைக் காட்டிக் கொண்டும், அந்தத் திசையிலிருந்து ஒருபோதும் பிறழாமலும், அந்தக் கோட்டிலிருந்து அசைக்கப் பட்டால், உடனேயும், விரும்பியும், விரைவாகவும் ,அதற்குத் திரும்பி வந்து கொண்டும் இருக்கிறதோ, அவ்வாறே ஒரு பக்தன் எப்போதும் இறைவனையே எதிர் நோக்கியும், அவன் மீது மனக்குவிப்பு கொள்ளும் போது மட்டுமே மனம் மகிழ்ந்தும் இருத்தல் வேண்டும்.
உடல், உங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள ஒரு வாடகை வீடு போன்றதாகும்.எவ்வளவு காலம் அதில் இருக்க வேண்டும் என இறைவன் ஸங்கல்பிக்கிறானோ, அவ்வளவு காலம், அவனுக்கு நன்றி கூறியும்,நம்பிக்கை மற்றும் பக்தி எனும் வாடகையை அவனுக்குச் செலுத்தியும் அங்கு வாழுங்கள்- பாபா