azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no compulsion that you should have an external altar (for the Yajna) as here. Only, you should be vigilant about the purity of the words you utter or listen to and the deeds you engage in. Really speaking, your heart is the ceremonial altar; your body, the fireplace; your hair, the holy grass (darbha); your wishes, the fuel-sticks that feed the fire; desire, the ghee that is poured into the fire to make it burst into flame; anger is the sacrificial animal; and the fire is the tapas (penance) we accomplish. People sometimes interpret tapas as ascetic practices like standing on one leg or on the head. No, tapas is not physical contortion. It is the complete and correct coordination of thought, word and deed. When this is achieved, the splendour of fire will manifest. (Divine Discourse, Oct 02, 1981)
WHEN YOU OFFER YOUR EVERY ACTION TO GOD,
YOUR DAILY ACTIVITIES BECOME WORSHIP. - BABA
உங்களுக்கு, இங்கிருப்பதைப் போல, வெளியில் யக்ஞத்திற்கான ஒரு ஹோம குண்டம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பேசும் அல்லது கேட்கும் வார்த்தைகள் மற்றும் நீங்கள் பங்கேற்கும் செயல்கள் ஆகியவற்றின் பரிசுத்தம் பற்றி நீங்கள் விழிப்புடன் இருந்தால் மட்டும் போதும். உண்மையைக் கூற வேண்டும் என்றால், உங்கள் இதயமே ஹோம குண்டம். உங்கள் உடலே அக்னி; உங்கள் ரோமமே தர்பை; உங்களது விருப்பங்களே அக்னியில் இரையாக இடப்படும் சமித்துக்கள்; ஆசையே அக்னியைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காக அதில் ஊற்றப் படும் நெய்;கோபமே, பலியிடப்படும் மிருகம்; ஹோம அக்னியே நாம் பெறும் தவமாகும். தபஸ் அல்லது தவம் என்பதை, மனிதர்கள் சில சமயம் ஒரு கால் அல்லது தலையில் நிற்பதைப் போன்ற ஹடயோகப் பயிற்சிகள் என விளக்கம் அளிக்கிறார்கள். இல்லை. தபஸ் என்பது உடலை முறுக்கிக் கொள்வது அல்ல. அது, சிந்தனை, சொல் மற்றும் செயலின் முழுமையான மற்றும் சரியான ஒருங்கிணைப்பாகும். இதை அடையும் போது, அக்னியின் காந்தி வெளிப்படும்.
உங்களது ஒவ்வொரு செயலையும்,இறைவனுக்கு அர்ப்பணிக்கும் போது, உங்களது அன்றாட செயல்கள், ஆராதனையாக மாறி விடுகின்றன - பாபா