azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Oct 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

When forces of injustice, immorality and untruth grow to monstrous proportions and indulge in a death-dance, when selfishness and self-interest are rampant, when men and women have lost all sense of kindness and compassion, the Atmic principle, assuming the form of Divine, emerges to destroy the evil elements. This is the inner meaning of the Dasara festival. Each one must decide for themselves whether they are Ravana or Rama according to the qualities they manifest in daily living. Who is Ravana and what are his ten heads? Kama (lust), Krodha (anger), Moha (delusion), Lobha (greed), Mada (pride), Matsarya (Envy), Manas (the mind), Buddhi (intellect), Chitta (will) and Ahamkara (the Ego) - these ten constitute the ten heads. Arrogance is a demon. Bad thoughts are demons. Rama is the destroyer of the bad qualities. During the ten days of Dasara, you must pray to God to destroy all the wicked traits present in you. - Divine Discourse, Oct 18, 1991
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK- HENCE GET RID OF THESE THESE BAD QUALITIES IN YOU. - BABA
எப்போது,அநீதி,அநாசாரம் மற்றும் அசத்தியத்தின் சக்திகள் அசுர அளவில் பெருகி, கோர தாண்டவம் ஆடுகின்றனவோ,எப்போது சுயநலம் மற்றும் சுயலாபம் ஆகியவை பரவி இருக்கின்றனவோ, எப்போது, ஆண்களும், பெண்டிரும், கனிவு மற்றும் பரிவின் அனைத்து உணர்வுகளையும் இழந்து நிற்கிறார்களோ, அப்போது ஆத்ம தத்துவம், தெய்வீக உருவெடுத்து, தீய சக்திகளை அழிக்க வெளிப்படுகிறது. தசரா பண்டிகையின் உள் அர்த்தம் இதுவே. ஒவ்வொருவரும், அன்றாட வாழ்க்கையில், தாங்கள் வெளிப்படுத்தும் குணங்களுக்கு ஏற்றவாறு, தாங்கள் ராவணனா அல்லது ராமனா என தாங்களே முடிவு செய்ய வேண்டும். ராவணன் யார்? அவனது பத்து தலைகள் யாவை? காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம், மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் இவையே பத்து தலைகள் ஆகும். திமிர் ஒரு அசுரன். தீய சிந்தனைகளும் அசுரர்களே. ராமனே, தீய சக்திகளை அழிப்பவர். தசராவின் பத்து தினங்களிலும், நீங்கள், உங்களிடம் உள்ள அனைத்து தீய இயல்புகளையும் அழித்து விட வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.
ஆசை, பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை , கர்மாவை அழிக்கிறது – எனவே இந்த கெட்ட குணங்களை விட்டொழித்து விடுங்கள் - பாபா