azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone must perform two yajnas every day. When you take food, remember, you are offering eatables to the fire that God has lit in you to digest food. Eat thus, in a prayerful mode, with profound gratitude. Gita teaches that fire which cooked the meal is God, the meal is God, the eater is God, the purpose of eating is to carry on your duties as entrusted by God and that the fruit of that work is to progress towards God. The second yajna is this: Pour your egoistic desires, emotions, passions, impulses and actions into the flames of dedication and devotion. That is real Yajna! Just as a child is taught to pronounce the words, “head”, “net”, “garland”, and so on by making it associate the sounds and the letter-forms with pictures of the objects, so too, through this kshara (temporary and worldly) symbols, the Akshara tatwa (Eternal Principle) must be brought before the consciousness. -Divine Discourse, Oct 11, 1972
WHEN YOU OFFER YOUR EVERY ACTION TO GOD,
YOUR DAILY ACTIVITIES BECOME WORSHIP. - BABA
ஒவ்வொருவரும், தினமும் இரண்டு விதமான யக்ஞங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் உணவு உட்கொள்ளும்போது,இறைவன் உங்களுள் உணவை ஜீரணிப்பதற்காக ஏற்றி வைத்துள்ள அக்னியில் உணவுப் பொருட்களை ஆஹுதியாக அளிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உணவை இவ்வாறு, ஒரு வழிபாட்டு முறையில், ஆழ்ந்த நன்றி உணர்வோடு உட்கொள்ளுங்கள். ஸ்ரீமத் பகவத் கீதை, உணவைச் சமைத்த அக்னி இறைவனே, உணவு இறைவனே, உண்பவரும் இறைவனே, உண்பது என்பது, இறைவனால் பணிக்கப் பட்ட உங்களது கடமைகளை ஆற்றுவதற்கே, மேலும் உழைப்பின் பலன் இறைவனை நோக்கி முன்னேறுவதே எனக் கூறுகிறது. இரண்டாவது யக்ஞம் இப்படிப் பட்டது: உங்களது அஹங்காரமான ஆசைகள்,உணர்வுகள், தீவிர விருப்பங்கள், உந்துதல்கள் மற்றும் செயல்களை அர்ப்பணிப்பு மற்றும் பக்தி எனும் அக்னியில் கொட்டி விடுங்கள்.இதுவே உண்மையான யக்ஞமாகும் ! எவ்வாறு ஒரு குழந்தை, ‘’ தலை ‘’, ‘’ வலை ‘’, ‘’ மாலை ‘’ போன்ற வார்த்தைகளை, அந்த ஓசைகளையும்,எழுத்து வடிவங்களையும், அந்த அந்தப் பொருட்களின் படங்களோடு இணைத்து, உச்சரிக்கப் பழக்கப் படுத்தப் படுகிறதோ, அவ்வாறே, இந்த க்ஷராவின் ( தாற்காலிகமான,உலகியலான ) சின்னங்களின் மூலம், அக்ஷர தத்துவத்தை ( நிரந்தரமான பரப்ரம்ம தத்துவத்தை ) உள்ளுணர்வின் முன் கொண்டு வர வேண்டும்.
உங்களது ஒவ்வொரு செயலையும்,இறைவனுக்கு அர்ப்பணிக்கும் போது, உங்களது அன்றாட செயல்கள், ஆராதனையாக மாறி விடுகின்றன - பாபா