azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

People observe only the external forms of worship without understanding the inner significance. The entire cosmos is a temple. The Lord pervades the cosmos. Prakruti (Nature) teaches the spiritual truth about Navarathri. The Lord has to be realised through sadhana (spiritual practices). Sadhana does not mean adoring God in a particular place or a particular form. It means thinking of God in all that you do, wherever you may be. You may ask whether this is possible. The answer is that it is possible by dedicating every action to God. In Navarathri, there is a form of worship called Angarpana Puja. In this worship, the limbs of one’s body are offered to the Divine! It means offering every action to the Divine, in a spirit of surrender and giving up the idea of separation between oneself and God. During this Navarathri, worship Mother Goddess in this spirit of unity and surrender. Be convinced that the same Divine dwells in all beings! - Divine Discourse, Oct 6, 1992
WHEN YOUR MIND IS FILLED WITH GOOD THOUGHTS, SUCH AS TRUTH, LOVE, FORBEARANCE AND COMPASSION,YOUR LIFE WILL BE FILLED WITH PEACE AND SERENITY. - BABA
அவற்றின் உள்ளார்ந்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், மக்கள் வெளிப்படையான வழிபாட்டு முறைகளை மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள். பிரபஞ்சம் அனைத்துமே ஒரு கோவில் தான். இறைவன் பிரபஞ்சமனைதிலும் ஊடுவிருவி உறைகிறான். ப்ரக்ருதி (இயற்கை) நவராத்திரியைப் பற்றிய ஆன்மீக உண்மையை போதிக்கிறது. இறைவனை ஆன்மீக சாதனையின் மூலம் உணர வேண்டும். சாதனை என்றால், இறைவனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட ரூபத்தில் போற்ற வேண்டும் என்பதல்ல. அதன் பொருள், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் செய்யும் அனைத்திலும் இறைவனை எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே ஆகும். இது சாத்தியமா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இது சாத்தியமே என்பது தான் இதற்கு பதில்., நவராத்திரியில், அங்கர்ப்பண பூஜை என்ற ஒரு வழிபாடு உண்டு. இந்த வழிபாட்டில், ஒருவரது உடலின் அங்கங்கள் எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது ! இதன் பொருள், சரணாகதி உணர்வுடனும், தனக்கும் இறைவனுக்கும் இடையே பிரிவு உள்ளது என்ற கருத்தை விடுத்தும், ஒவ்வொரு செயலையும்,இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பதாகும். நவராத்திரியின் போது, அன்னை தேவியை இந்த ஒற்றுமை மற்றும் சரணாகதி உணர்வுடன் வழிபடுங்கள். அதே தெய்வீகம் தான் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறது என்பதை உறுதியாக நம்புங்கள் !
எப்போது உங்கள் மனம் நற்சிந்தனைகளான, சத்யம், ப்ரேமை, சகிப்புத் தன்மை மற்றும் பரிவு ஆகியவற்றால் நிரம்பி இருக்கிறதோ, உங்கள் வாழ்க்கையும் சாந்தி மற்றும் அமைதியால் நிரம்பி இருக்கும் - பாபா