azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Different machines are operated by electricity. Appliances are varied in their forms and functions, but the power that makes them function is one and the same. When current flows through an electric bulb, it illuminates the room and gives light. When the same current flows through an electric fan, it produces breeze and cools the room. Likewise, the Atma-Principle demonstrates its oneness in all the myriad entities in which it assumes various forms and names. Just as there are bulbs with varying wattages, serving different purposes, there are differences amongst living beings. Electricity running through all the different bulbs is the same. The variation in the amount of light that comes from them are due to differences in the capacity of the bulbs. Likewise one who is filled with love shines radiantly. One lacking in love resembles a dim light. To shine more brightly, the bulb has to be changed, not the electric current. [Divine Discourse, Sep 6, 1984]
GOD IS EVER STEADY AND PERMANENT. MAKE HIM THE BASIS OF
YOUR LIFE AND THINK OF HIM ALWAYS! - BABA
பல விதமான இயந்திரங்கள் மின்சாரத்தால் இயக்கப் படுகின்றன.இந்த உபகரணங்கள் அவைகளது வடிவம் மற்றும் இயக்கத்தில் மாறுபடுகின்றன; ஆனால், அவற்றை இயங்குமாறு செய்யும் சக்தி ஒன்றே. மின்சாரம், ஒரு மின்விளக்கின் மூலம் பாயும் போது, அது அறைக்கு ஒளியூட்டி, வெளிச்சம் அளிக்கிறது.எப்போது அதே மின்சாரம் ஒரு மின் விசிறியில் பாய்கிறதோ, அப்போது அது தென்றலை உருவாக்கி, அறையை குளிர்விக்கிறது. அதைப் போலவே, ஆத்ம தத்துவம், பலவிதமான ரூப ,நாமங்களை ஏற்கும்போது, எண்ணற்ற அனைத்து ஜீவராசிகளிலும் தனது ஒருமையை வெளிப்படுத்துகிறது. எவ்வாறு, பலவிதமான சேவைகளை ஆற்றும் வெவ்வேறு ஒளிச்சக்தி கொண்ட மின் விளக்குகள் உள்ளனவோ, அவ்வாறே ஜீவராசிகளுக்கு இடையேயும், வேற்றுமைகள் உள்ளன. வெவ்வேறு மின் விளக்குகளில் பாயும் ,மின்சக்தி ஒன்றே. அவைகளிலிருந்து வரும வெளிச்சத்தில் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம், அந்த மின்விளக்குகளின் வலிமைகளில் உள்ள வேறுபாடுகளே. அதைப் போலவே, ப்ரேமையால் நிரம்பிய ஒருவர் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார். ப்ரேமை அற்ற ஒருவர் ஒரு மங்கலான வெளிச்சத்தைப் போன்றவர். அதிகமாக ஒளி விட்டுப் பிரகாசிப்பதற்கு, மின் விளக்கை மாற்ற வேண்டுமே அன்றி, மின்சாரத்தை அல்ல.
இறைவன், என்றும் நிலையானவனும், நிரந்தரமானவனும் ஆவான்.அவனை உங்கள் வாழ்வின் ஆதாரமாக ஆக்கிக் கொண்டு,அவனை எப்போதும் நினைவு கூறுங்கள் !- பாபா