azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

God is the embodiment of Love. To experience God, you must fill yourselves with love. Through Love alone can you experience the embodiment of Love. The person filled with jealousy and hatred is like a blind man who cannot see the Sun, however brightly it may shine. Covered by ignorance, such a person cannot see God, however near He may be. The wise person (Jnani) filled with good qualities like truth, love, absence of jealousy, ego and hatred, can see God without searching for Him. Students, youth and elders alike should give no room for evil traits like jealousy. You must feel happy when others succeed in studies, sports, or profession. To feel jealous towards the successful person is a threefold offence. The first offence is one's neglect of duty or studies; the second offence is to entertain jealousy towards the better individual; and the third is to lament over one's own failure. (Divine Discourse, Sep 6, 1984)
DURYODHANA’S HATRED AND JEALOUSY BROUGHT A COMPLETE RUIN OF HIMSELF AND THE KAURAVA CLAN.GIVE UP JEALOUSY, EGO AND HATRED. - BABA
இறைவன், ப்ரேமையின் திருவுருவம். இறைவனை அனுபவிக்க, நீங்கள் உங்களையே ப்ரேமையால் நிரப்பிக் கொள்ள வேண்டும். ப்ரேமையின் மூலம் மட்டுமே, நீங்கள் ப்ரேமையின் திருவுருவமான இறைவனை அனுபவிக்க முடியும். பொறாமை மற்றும் வெறுப்பால் நிரம்பிய மனிதன், எவ்வளவு பிரகாசமாக அது இருந்தாலும் , சூரியனைக் காண முடியாத ஒரு குருடனைப் போன்றவனே. அறியாமையால் சூழப்பட்ட இப்படிப் பட்ட மனிதனால், எவ்வளவு அருகில் இருந்தாலும், இறைவனைக் காண முடியாது. சத்யம், ப்ரேமை, பொறாமையின்மை, அஹங்காரமின்மை மற்றும் வெறுப்பபின்மை ஆகிய நல்ல குணங்களைக் கொண்ட ஞானி, தேடாமலேயே இறைவனைக் காண முடியும். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் உட்பட அனைவரும் தீய குணமான பொறாமை போன்றவற்றிற்கு இடம் அளிக்கக் கூடாது. மற்றவர்கள், படிப்பு, விளையாட்டுப் போட்டிகள் அல்லது தொழிலில் வெற்றி பெறும் போது, நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வெற்றி பெற்ற மனிதனைக் கண்டு பொறாமை கொள்வது மூன்று விதத்தில் குற்றமாகும். முதல் குற்றம் ஒருவர் தனது கடமை அல்லது படிப்பை உதாசீனப்படுத்துவது; இரண்டாவது குற்றம் தன்னை விடச் சிறந்த மனிதர் மீது பொறாமை கொள்வது; மூன்றாவது தனது சொந்த தோல்வியைக் கண்டு புலம்புவது.
துரியோதனின் வெறுப்பும்,பொறாமையும், அவனுக்கும்,கௌரவ குலத்திற்கும் ஒரு முழுமையான அழிவைத் தேடித் தந்தது. பொறாமை, அஹங்காரம் மற்றும் வெறுப்பை விட்டு விடுங்கள்- பாபா