azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

People resort to Gurus to receive mantras (mystically powerful formulae) to be recited by them for their spiritual upliftment; others seek men of medicine and holy monks to get yantras (esoteric talismans) for protection and to ward off evil forces; some others seek to learn from priests tantras (secret rites) for attaining superhuman powers. But all these are wasteful efforts! You should consider your body as the tantra, your own breath as the mantra and your very own heart as the yantra. There is no need to seek these outside yourself. When all words emanating from you are sweet, your breath truly is the Rig Veda. When you practice restraint and listen to and prefer only sweet and noble speech, all that you hear becomes Sama Veda! When you do only noble, helpful and uplifting actions, all that you do becomes Yajur homa. Then, you will be performing every day the Vedapurusha Yajna, the fire sacrifice which propitiates the Vedic Spirit. (Divine Discourse, Oct 02, 1981)
THE BEAUTY OF OUR LIFE IS DIRECTLY PROPORTIONAL TO OUR GOOD HABITS. - BABA
மக்கள், தங்களது ஆன்மீக முன்னேற்றத்திற்காக,தாங்கள் ஜபிக்க வேண்டிய மந்திரங்களைப் பெறுவதற்காக குருமார்களை நாடுகிறார்கள்; பிறர், தங்களது பாதுகாப்பு மற்றும் தீய தேவதைகளை விரட்டுவதற்கான யந்திரங்களைப் பெறுவதற்காக மந்திரவாதிகள் அல்லது யோகிகளை நாடுகிறார்கள்; மேலும் சிலர்,அமானுஷ்யமான சக்திகளைப் பெற்றுத் தரும் தந்திரங்களைக் கற்றுக் கொள்ள பூசாரிகளை நாடுகிறார்கள். ஆனால், இவை அனத்தும் வீண் முயற்சிகளே! நீங்கள் உங்கள் உடலையே தந்திரமாகவும், உங்களது சுவாசத்தையே மந்திரமாகவும், உங்களது சொந்த இதயத்தையே யந்திரமாகவும் கருத வேண்டும். இவை அனைத்தையும் வெளியில் நாட வேண்டிய அவசியமே இல்லை. எப்போது, உங்களிடமிருந்து வெளிப்படும் அனைத்து சொற்களும் இனிமையாக இருக்கின்றனவோ, அப்போது, உங்களது சுவாசமே ரிக் வேதம் தான். எப்போது நீங்கள் உங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டு, நல்ல மற்றும் சீரிய பேச்சை மட்டுமே விரும்பிக் கேட்கிறீர்களோ, அப்போது நீங்கள் கேட்கும் அனைத்தும் சாம வேதமே ! எப்போது நீங்கள் சீரிய, பயனுள்ள மற்றும் மேம்படுத்தும் செயல்களை மட்டுமே ஆற்றுகிறீர்களோ, அப்போது நீங்கள் செய்யும் அனைத்தும் யஜூர் வேத ஹோமமே. பின்னர், நீங்கள், வேதங்களின் சாரத்தைப் பரப்பும், வேத புருஷ யக்ஞத்தை, தினந்தோறும் செய்து கொண்டு இருப்பவர்களாக ஆகி விடுகிறீர்கள்.
நமது நல்ல பழக்கங்களைப் பொறுத்தே, நமது வாழ்க்கையின் அழகு இருக்கும்- பாபா