azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The value of every human being lies in their capability to purify their thoughts, words and deeds. The three instruments you have - mind, tongue and hand, must be sanctified to raise you to the highest level. A person is judged by their spoken words. The spoken word, though it may be short and appears to be only a sound, has in it, the power of an atom bomb. When a word of hope is spoken to a person sunk in despair, it charges them with elephant’s strength. When a word of calumny is uttered to a person who is extremely strong and happy, it can lead them to slump on the ground overcome by sorrow. Words can confer strength; they can drain one’s energy too. Words can win friends; words can turn friends into enemies as well; they can elevate or lower an individual. You must learn the habit of making your words sweet, soft and pleasant. (Divine Discourse, Aug 31, 1981)
BELIEVE THAT GOD RESIDES IN ALL BEINGS. SPEAK SUCH WORDS AS
WOULD SPREAD GOODNESS, TRUTH AND BEAUTY. - BABA
தங்களது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களைப் பரிசுத்தப்படுத்துவதில் அவர்களுக்கு உள்ள திறனில் தான் மனிதர்களின் மதிப்பு இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் மனம்,நாக்கு மற்றும் கை என்ற மூன்று உபகரணங்கள், உங்களை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக, புனிதமாக்கப் பட வேண்டும். ஒரு மனிதன், அவன் பேசும் வார்த்தைகளைக் கொண்டே கணிக்கப் படுகிறான். பேசும் வார்த்தை, சிறியதாகவும், வெறும் ஒரு ஓசையாகத் தோன்றினாலும் கூட, அதனுள் ஒரு அணு ஆயுதத்தின் சக்தியையே உள்ளடக்கியதாகும். மனத்தளர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மனிதனிடம் பேசப்படும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தை, அவர்களுக்கு ஒரு யானை பலம் அளித்து விடுகிறது. வலுவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒருவரிடம் கூறப்படும் அவதூறான வார்த்தை, அவர்களை சோகத்தினால், தரையில் வீழ்த்தி விடுகிறது. வார்த்தைகள் சக்தியை அளிக்கவும் முடியும்; அவை ஒருவரது சக்தியை இழக்கச் செய்யவும் கூட முடியும். வார்த்தைகள், நண்பர்களைப் பெற்றுத் தரவும் முடியும்; அவை நண்பர்களை விரோதிகளாக ஆக்கவும் முடியும் ; அவை ஒருவரை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ முடியும். நீங்கள், உங்களது வார்த்தைகள், இனிமையானதாகவும்,இதமானதாகவும், இன்பமூட்டுவதாகவும் இருக்குமாறு ஆக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இறைவன் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறான் என்பதை நம்புங்கள். சத்தியம், சிவம், சுந்தரம் ஆகியவை பரவதற்கு ஏற்ற வார்த்தைகளையே பேசுங்கள்.