azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

It is said, “Tell me your company, I shall tell you what you are”. Hence, first and fore-most, move in good company. Then you will become a good individual. You need not acquire goodness from somewhere. It is inherent in your nature. You must cultivate goodness within yourself, just as a tender sapling is nourished and nurtured to become a big tree. Having been born as human beings, it is a great sin to behave like animals. Whenever animal qualities raise their ugly heads, you must immediately remind yourself, “I am not an animal; I must act as a human being.” Unfortunately, today, wherever you see, animal qualities are rampant. Wherever you go and whomever you come across, there is only one desire – money, money and more money. Remember, Money comes and goes, but morality comes and grows! Hence, cultivate and grow in moral values! (Divine Discourse, Sep 5, 2006)
HAVE THE NAME AND FORM OF GOD AS YOUR COMPANION, GUIDE AND GUARDIAN
THROUGHOUT THE TOILS OF THE WAKING HOURS. - BABA
“உன் நட்பு வட்டம் எது என்று சொல், நீ யார் என்பதை நான் சொல்கிறேன்’’ என்று கூறப்படுகிறது. எனவே, முதன் முதலில், நல்லோரின் நட்பு வட்டத்தில் பழகுங்கள். பின்னர், நீங்கள் ஒரு நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள். நற்தன்மையை நீங்கள் எங்கிருந்தோ பெறத் தேவை இல்லை.அது உங்கள் இயல்பிலேயே உறைந்துள்ளது. எவ்வாறு ஒரு இளஞ்செடி, ஒரு பெரிய மரமாக ஆவதற்காக, பேணி, வளர்க்கப் படுகிறதோ, அவ்வாறே நீங்கள் நல்லவற்றை உங்களுள்ளேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். மனிதர்களாகப் பிறந்த பின், மிருகங்ளைப் போல நடந்து கொள்வது மிகப் பெரிய பாவமாகும். எப்போதெல்லாம், வக்ரமான மிருக குணங்கள் தலை தூக்குகின்றனவோ, உடனேயே உங்களுக்கு நீங்களே, ‘’ நான் ஒரு மிருகமல்ல; நான் ஒரு மனிதனைப் போல நடந்து கொள்ள வேண்டும் ‘’ என்று நினைவூட்டிக் கொள்ள வேண்டும். துரதிருஷ்ட வசமாக, இன்று நீங்கள் எங்கு பார்த்தாலும், மிருக குணங்களே பரவலாக உள்ளன. நீங்கள் எங்கு சென்றாலும், எவரைச் சந்தித்தாலும், ஒரு ஒரு ஆசைதான் இருக்கிறது- பணம், பணம், மேலும் அதிக பணம். பணம் வரும் போகும், நற்குணம் வரும், வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நற்குண நலன்களை அபிவிருத்தி செய்து கொண்டு, நல்லொழுக்கத்தில் வளருங்கள்.
கண்விழித்திருக்கும் காலத்தின் கடமைகள் முழுவதிலும்,
கடவுளின் திருநாம, ரூபங்களை உங்களது நண்பனாக, நல்வழிகாட்டியாக மற்றும் நலம் காப்போனாகக் கொண்டிருங்கள் - பாபா