azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The story of Krishna and the gopis (cowherd-girls) has a deep inner meaning. Brindavan is not a specific place on the map; it is the Universe Itself. Every heart is filled with the longing for the Lord, and the flute is the call of the Lord. In the sport called Rasakrida where Lord Krishna is described as dancing with the gopis in the moonlight, every maid had a Krishna holding her hand in the dance. This is the symbol of the yearning and the travail borne by those who aim at reaching His presence. The Lord manifests such Grace that each one of you has the Lord all for yourself; you need not be sad that you won't have Him, when others get Him; nor need you be proud that you have Him and no one else can have Him at the same time! The Lord is installed in the altar of your heart. (Divine Discourse, Nov 23, 1968)
IT SERVES NO PURPOSE IF YOU MERELY ACKNOWLEDGE THAT THE LORD HAS COME
BUT DO NOT YEARN TO BENEFIT FROM THE ADVENT! - BABA
ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் கோபிகைகளின் கதை ஒரு ஆழ்ந்த உள்ளர்த்தம் கொண்டது. பிருந்தாவன் என்பது , வரைப் படத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் அல்ல; அது இந்த பிரபஞ்சமே. ஒவ்வொரு இதயமும், இறைவனுக்கான ஏக்கத்துடன் நிரம்பியதாகும்; புல்லாங்குழல் ஓசையே இறைவனது அழைப்பாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளுடன் நில ஒளியில் நடனம் ஆடுவதாக வர்ணிக்கப் படும் ராஸக்ரீடை என்று அழைக்கப்படும் விளையாட்டில், ஒவ்வொரு கோபிகைக்கும், நடனத்தில் அவளது கரத்தைப் பிடித்தவாறு ஒரு கிருஷ்ணர் இருந்தார். இது, இறைவனது சன்னிதானத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டவர்களின் ஏக்கத்தையும், கடின உழைப்பையும் குறிக்கும் சின்னமாகும். நீங்கள் ஒவ்வொருவரும், உங்களுக்காகவே இறைவன் முழுமையாக இருக்கிறான் என்ற அளவிற்கு இறைவன் கருணையை வெளிப்படுத்துகிறான்;மற்றவர்களுக்கு அவன் கிடைத்து விட்டானே, உங்களுக்குக் கிடைக்க மாட்டானோ என நீங்கள் கவலைப்படவும் தேவை இல்லை அல்லது உங்களுக்கு அவன் கிடைத்து விட்டான், மற்றவர்களுக்கு அதே சமயத்தில் கிடைக்க மாட்டான் எனக் கர்வம் கொள்ளவும் தேவை இல்லை ! இறைவன் உங்களது இதயம் எனும் கோவில் பிரதிஷ்டை ஆகி விடுகிறான்.
அவதாரத்தின் மூலம் பயன் பெறுவதைக் கற்றுக் கொள்ள ஏங்காவிடில், இறைவன், அவதாரமாக இற(ர)ங்கி வந்து விட்டான் என்று நீங்கள் வெறுமனே ஏற்றுக் கொள்வதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை - பாபா