azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

No two individuals can agree on any matter, be they brothers or sisters, lifemates or father and son. It is only as pilgrims on the Godward path that two can heartily agree and lovingly co-operate. You can be a pilgrim even while attending to your daily duties. Only, you have to feel that each moment is a step towards Him. Do everything as dedicated to Him, as directed by Him, as work for His adoration or for serving His children. Test all your actions, words, thoughts on this touchstone: "Will this be approved by God? Will this rebound to His renown?" When you dedicate yourselves to the glorification of the Lord, you will revere the body, the senses, the intelligence, the Will and all the instruments of knowledge, action and feeling as essential for His work. While others will get intoxicated with pride, the devotee will be suffused with prema (selfless love). (Divine Discourse, Nov 23, 1968)
YOU MAY NOT ALWAYS OBLIGE, BUT YOU CAN ALWAYS SPEAK OBLIGINGLY. - BABA
எந்த இரண்டு மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் சகோதர, சகோதரிகளாக இருக்கட்டும், வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது தந்தை மற்றும் தனயனாக இருக்கட்டும், எந்த ஒரு விஷயத்திலும் ஒத்துப் போவதில்லை. இறைவனது பாதையில் செல்லும் புனித யாத்திரீகர்களாக இருக்கும் போது மட்டுமே, இருவரும் மனதார ஏற்றுக் கொண்டு, பரிவுடன் ஒத்துழைக்க முடிகிறது. உங்கள் அன்றாட கடமைகளை ஆற்றும்போதும் கூட, நீங்கள் ஒரு புனித யாத்திரீகராக இருக்க முடியும். ஒவ்வொரு தருணமும், இறைவனை நோக்கிச் செல்லும் ஒரு படி என்பதை நீங்கள் உணர்ந்தால் மட்டும் போதும். ஒவ்வொன்றையும், அவனுக்கு அர்ப்பணிப்பாகவும், அவனால் இயக்கப் படுவதாகவும், அவனைப் போற்றுவதற்கான பணியாகவோ அல்லது அவனது குழந்தைகளுக்கு ஆற்றும் சேவையாகவோ கருதி, செய்யுங்கள். உங்களது அனைத்து செயல்கள், சொற்கள் மற்றும் சிந்தனைகளை,’’ இது இறைவனால் அங்கீகரிக்கப் படுமா? இது அவனுக்கு புகழ் சேர்க்குமா?’’ என்ற உரைகல்லில் பரிசோதித்துப் பாருங்கள். எப்போது, நீங்கள் உங்களையே, இறைவனைப் பெருமைப் படுத்துவதற்காக அர்ப்பணித்துக் கொள்கிறீர்களோ, அப்போதே, நீங்கள் உங்கள் உடல், புலன்கள், புத்தி, சங்கல்பம் மற்றும் அனைத்து அறிவு, செயல் மற்றும் உணர்வுகளின் கருவிகளை, இறைவனது பணிக்கு அத்தியாவசியமானவை என்று பயபக்தியுடன் மதிப்பீர்கள். மற்றவர்கள் தற்பெருமையால் மயங்கி இருக்கும் அதே நேரத்தில், பக்தன் ப்ரேமையில் தோய்ந்திருப்பான்.
உங்களால் எப்போதுமே உதவ முடியாமல் போகலாம்,
ஆனால், எப்போதும் இதமாகப் பேச முடியுமே- பாபா