azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Human life can be compared to a four-storeyed mansion. Brahmacharya, Grihastha, Vanaprastha and Sanyasa (celibacy, householdership, recluse and renunciant) are the four stages of human life. Brahmacharya is the foundation; if the foundation is strong, the other three stages will be automatically taken care of. But modern youth are ruining three-fourths of their lives because they do not have a strong foundation. When elders advise them to sit for prayers for at least five minutes, they say they have no time, but they have all the time in the world to wallow in bad qualities and habits. Youth in particular should make every effort to build a strong foundation of Brahmacharya. Merely remaining a bachelor is not Brahmacharya. Constant contemplation on Brahman is true Brahmacharya. Think of God and chant His Name under all circumstances. Lead a life of purity. Dedicate your life to the principle of love. This ensures the safety of the mansion of your life. (Divine Discourse, Sep 10, 2002)
THE SAFETY AND SANCTITY OF THE BODY LIES IN MAKING
PROPER USE OF YOUR FIVE SENSES. - BABA
மனித வாழ்க்கையை, ஒரு நான்கு அடுக்கு மாளிகைக்கு ஒப்பிடலாம். பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாசம் ஆகியவையே மனித வாழ்க்கையின் இந்த நான்கு நிலைகள். பிரம்மச்சர்யமே அஸ்திவாரம்; அஸ்திவாரம் உறுதியாக இருந்தால், மற்ற மூன்று நிலைகளும் தானாகவே பராமரிக்கப் படும்.ஆனால், அவர்களிடம் ஒரு வலுவான அஸ்திவாரம் இல்லாததால், நவீன கால இளைஞர்கள், அவர்களது வாழ்க்கையின் நான்கில் மூன்று பங்கை பாழடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பெரியவர்கள், அவர்களை ஐந்து நிமிட நேரம் பிரார்த்தனைகளுக்காக அமரச் சொல்லும் படி அறிவுத்தும் போது, தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறுகிறார்கள்; ஆனால், தீய பண்புகள் மற்றும் பழக்கங்களில் உழல்வதற்கு அவர்களுக்கு ஊர்ப்பட்ட நேரம் இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் ஒரு வலுவான ப்ரம்மச்சர்யத்தின் அஸ்திவாரத்தை நிறுவ எல்லா முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே ப்ரம்மச்சர்யம் ஆகாது. பரப்பரம்மத்தை, இடையறாது தியானிப்பதே உண்மையான ப்ரம்மச்சர்யம் ஆகும். இறைவனை எண்ணி, எல்லாச் சந்தர்ப்பங்களிலும், அவன் திருநாமத்தை உச்சரியுங்கள். பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை நடத்துங்கள். ப்ரேம தத்துவத்திற்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். இதுவே, உங்கள் வாழ்க்கை எனும் மாளிகையின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும்.
உங்களது ஐம்புலன்களை முறையாகப் பயன்படுத்துவதில் தான்,
உடலின் பாதுகாப்பும், புனிதத்துவமும் இருக்கிறது- பாபா