azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Sep 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Today people are not making proper use of their mind (mati), effort (gati), position (sthiti) and wealth (sampatti)? As a result, they are losing the sacred energy that God has blessed them with. Not merely this, they are subjected to misery and grief because of their evil traits like kama, krodha and lobha (desire, anger and greed). They have absolutely no control over their desires. When one desire is fulfilled, people crave for another. Anger is another evil trait which ruins people. Hatred is more dangerous than anger. It gives rise to many evil qualities which obstruct your experience of Divinity. Humans are supposed to live for a hundred years, but one’s life-span is cut short by these evil qualities. When these evil traits are totally subdued, one can enjoy a long and happy life. One will not lose one’s life even if he or she were to meet with a serious accident. (Divine Discourse, Sep 10, 2002)
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK – HENCE THESE BAD QUALITIES MUST BE CORRECTED. - BABA
இன்று மனிதர்கள், தங்களது புத்தி ( மதி),முயற்சி ( கதி), பதவி (ஸ்திதி ) மற்றும் செல்வத்தை ( ஸம்பத்தி) முறையாகப் பயன்படுத்துவதில்லை; அதன் விளைவாக, தெய்வம் பரிசாக அளித்த புனித சக்தியை இழந்து கொண்டு இருக்கிறார்கள். இது மட்டும் அல்லாது,காமம்,க்ரோதம், லோபம் போன்ற அவர்களது தீய குணங்களால் துக்கத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு தங்களது ஆசைகள் மீது கட்டுப்பாடே இல்லை. ஒரு ஆசை பூர்த்தி ஆனவுடன், அவர்கள் மற்றொன்றிற்காக ஏங்குகிறார்கள். மற்றுமொரு தீய குணமான கோபம், மனிதர்களை அழித்து விடுகிறது. த்வேஷம், கோபத்தை விட அதிகம் அபாயகரமானதாகும். அது, நீங்கள் தெய்வீகத்தை உணர முடியாதவாறு தடுக்கும் மேலும் பல தீய குணங்களை உருவாக்குகிறது. மனிதர்கள், நூறு ஆண்டு காலம் வாழ்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது; ஆனால், இந்தத் தீய குணங்களின் காரணமாக, ஒருவரின் வாழ்நாள் குறைக்கப் பட்டு விடுகிறது. இந்தத் தீய குணங்கள் முழுமையாக அடக்கப் படும் போது, ஒருவர், ஒரு நீண்ட மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். ஒருவர், ஒரு தீவிரமான விபத்தை சந்திக்க நேரிட்டாலும் கூட, அவனோ அல்லது அவளோ, தனது வாழ்க்கையை இழக்க மாட்டார்.
ஆசை, பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை , கர்மாவை அழிக்கிறது – எனவே இந்த கெட்ட குணங்கள் திருத்தி அமைக்கப் பட வேண்டும் - பாபா