azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 30 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 30 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You must know that each one is a pilgrim and each life is but a stage in the journey towards the city of liberation. This body is a rest-house, in which we stay for a short time during this pilgrimage. The mind is the caretaker, the watchman in the choultry where we rest. We are not to treat him as if he is master or owner. But, we ought to take care that the house we are privileged to occupy is not damaged or polluted. We have to take good care of it and its furnishings, and treat the watchman politely. The pilgrim is either helped or handicapped by the antics of the mind. The mind has as its warp and woof, desire or thirst for something or other, getting some gain or avoiding some loss. Desire arises from attachment, often the consequence of delusion. Desire distorts and denigrates the mind. It keeps the mind incessantly agitated. The bliss which emanates from the Atma has, in fact, to be stored, with the help of buddhi (the intellect) as a channel, in the reservoir of the mind. That is its genuine function. (Divine Discourse, Nov 20, 1982)
JUST AS WHOLESOME FOOD GIVES HEALTH AND STRENGTH TO THE BODY,
PRAYER PURIFIES THE MIND AND STRENGTHENS THE SPIRIT. - BABA
ஒவ்வொருவரும் ஒரு தீர்த்த யாத்ரீகரே என்பதையும்,ஒவ்வொரு ஜன்மமும், மோக்ஷம் எனும் நகரத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் ஒரு கட்டமே அன்றி வேறில்லை என்பதையும் , நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த யாத்திரையின் போது, நாம் ஒரு சிறிது காலம் தங்கி இருக்கும் ஒரு விடுதியே, இந்த உடல். மனம், நாம் தங்கி இருக்கும் விடுதியின் பராமரிப்பாளர் மற்றும் காவலரே. நாம், அவரை, ஒரு தலைவன் அல்லது உரிமையாளர் போல நடத்தக் கூடாது. ஆனால், நாம் தங்கும் உரிமை பெற்ற அந்த இல்லம், சேதமடையாமலும், களங்கப்படாமலும் இருக்குமாறு, நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நாம், அதையும், அதன் சாமான்களையும் நல்ல படியாக வைத்துக் கொள்வதோடு, காவலாளியையும் கண்ணியமாக நடத்த வேண்டும். யாத்ரீகர், மனதின் கோமாளித்தனத்தால், உதவி பெறவோ அல்லது தடுக்கப் படவோ செய்கிறார். மனம், ஏதோ ஒன்றிற்கான ஆசை அல்லது ஏக்கத்தையும், சில லாபம் அடைவது அல்லது நஷ்டத்தைத் தவிர்ப்பது என்பதையும், தனது நூலிழைகளைப் போலக் கொண்டதாகும். ஆசை என்பது, பெரும்பாலும் மாயையின் விளைவாக ஏற்படும் பற்றுதலிலிருந்து எழுவதே,. ஆசை, மனதைத் திரித்துத் தாழ்த்தி விடுகிறது. அது, மனதை இடையறாது குழப்பத்திலேயே வைத்திருக்கும். ஆத்மாவிலிருந்து வரும் ஆனந்தத்தை, உண்மையில், புத்தியின் துணை கொண்டு, மனம் எனும் ஏரியில், ஒரு கால்வாயைப் போலச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே, அதன் உண்மையான பணியாகும்.
எப்படி பரிபூரணமான உணவு, உடலுக்கு ஆரோக்கியத்தையும், வலிமையையும் அளிக்கிறதோ, அவ்வாறே, பிரார்த்தனை மனதைப் பரிசுத்தப் படுத்தி, ஆத்மாவை வலுப்படுத்துகிறது - பாபா