azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

God is everywhere at all times; He accomplishes everything. He accomplishes the minor feat of assuming human form, and growing up with men and women and being in their midst to win them over to the path of truth. He gives humanity a chance to savour His sweetness and have a glimpse of His glory. He acts despite the absence of any compulsion, so that human beings may choose to act likewise! The Sage Vyasa happened to pass by when Krishna was washing the horses of Arjuna's chariot in the water of the Yamuna; he shed a tear, contemplating the duty that the Lord had imposed on Himself in order to guide man aright. Krishna played the role of servant to Arjuna, so that man may know how to serve and thereby rise to sovereignty! (Divine Discourse, Aug 13, 1971)
PRAYER ALONE MAKES LIFE HAPPY, HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE. - BABA
இறைவன் அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும், எல்லாக் காலங்களிலும் நிறைந்து இருப்பவன்; அவன் அனைத்தையும் சாதிப்பவன். அவன், சிறிய பணியான, மனித உருவத்தை ஏற்று, ஆண்கள் மற்றும் பெண்டிரிடையே வளர்ந்து, அவர்களை சத்தியத்தின் பாதையில் இட்டுச் செல்வதை சாதிப்பதற்காக, அவர்களிடையே இருக்கிறான். மனித குலம், அவனது இனிமையைச் சுவைத்து அனுபவிக்கவும், அவனது மாட்சிமையின் ஒரு கண நேரக் கண்ணோட்டத்தைக் காணுவதற்கும் ஆன ஒரு வாய்ப்பை அளிக்கிறான். மனிதர்களும் அவனைப் போலவே நடந்து கொள்வதற்காக,எந்த விதக் கட்டாயமும் இன்றி , செயலாற்றுகிறான் ! அர்ஜூனனது தேர்க் குதிரைகளை, யமுனா நதி நீரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குளிப்பாட்டிக்குக் கொண்டிருந்த போது, அந்த வழியே , வியாச முனிவர் சென்று கொண்டு இருந்தார்; மனிதனை சரியான வழியில் நடத்திச் செல்வதற்காக, இறைவன் தன் மீதே சுமத்திக் கொண்ட கடமையை எண்ணி, அவர் , ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தாராம் . மனிதன், சேவை ஆற்றுவது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து, இறையாண்மையின் நிலைக்கு உயர வேண்டும் என்பதற்காக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனின் சேவகன் என்ற பாத்திரத்தை , நடித்துக் காட்டினார் !
இந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும், வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது - பாபா