azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Aug 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Praise and censure are reflections of the inner being. A virtuous person never criticises others; only the mean indulge in such unsacred activities. The color you see depends on the color of glasses you wear. Wear the glasses of love, and you will see love all around. Do not attach importance to criticism. If someone criticizes you loudly, it goes into thin air. If they accuse you silently, it goes to themselves. Are they criticising your body? The body is inert. Are they criticising the Atma? If so, the same Atma dwells in both and hence amounts to criticising themselves! A true seeker of truth will realise this fact! Take time to recognise the hundred faults present within yourself. Instead, why do you seek to point out the most insignificant fault in others? The bad in you reflects as the bad in others. Choose to correct yourself first! Only then will your mind become pure. Thus always develop sacred thoughts! (Divine Discourse, Nov 23, 1998)
TO ACHIEVE SPIRITUAL TRANSFORMATION, GENEROUSLY DEVELOP THE QUALITIES OF KINDNESS,LOVE, FORBEARANCE AND COMPASSION. - BABA
போற்றுதலும், தூற்றுதலும், உள்ளார்ந்த மனப்பாங்கின் பிரதிபலிப்புக்களே. ஒரு சீலமுள்ள மனிதன் ஒருபோதும் பிறரை விமர்சிக்க மாட்டான்; கீழ்த்தரமானவர்களே இப்படிப் பட்ட புனிதமற்ற செயல்களில் ஈடுபடுவார்கள். நீங்கள் காணும் நிறம், நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறத்தைப் பொறுத்தே இருக்கும். ப்ரேமையின் கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள்; நீங்கள் உங்களைச் சுற்றி எல்லா இடத்திலும் ப்ரேமையையே காண்பீர்கள். நிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். யாராவது உங்களை உரக்க நிந்தித்தால், அது காற்றோடு போய் விடும். அவர்கள் மௌனமாக நிந்தித்தால், அது அவர்களுக்கே போய் சேர்ந்து விடும். அவர்கள் உங்கள் உடலை நிந்திக்கிறார்களா? உடல், அசலமானது. அவர்கள் ஆத்மாவை நிந்திக்கிறார்களா? அப்படி என்றால், அதே ஆத்மா தான் இருவருள்ளும் உறைகிறது; எனவே, அது அவர்கள் தங்களையே நிந்தித்துக் கொள்வது போலாகும்! சத்தியத்தை உண்மையிலேயே நாடும் ஒருவர் இந்த உண்மையை உணர்ந்திருப்பார்! உங்களுள்ளேயே இருக்கும் நூறு குறைகளை அறிந்து கொள்ள, நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, பிறரிடம் உள்ள அற்பமான குறைகளைச் சுட்டிக் காட்ட ஏன் விழைகிறீர்கள் ? உங்களிடம் உள்ள தீமையே, பிறரிடம் உள்ள தீமையாக பிரதிபலிக்கிறது. முதலில் உங்களைத் திருத்திக் கொள்வரைத் தேர்ந்தெடுங்கள்! அதன் பிறகே உங்கள் மனம் பரிசுத்தமாகும். எனவே, எப்போதும் புனிதமான சிந்தனைகளையே அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் !
ஆன்மீக மனமாற்றத்தை அடைவதற்கு, கனிவு, ப்ரேமை, பொறுமை மற்றும் கருணை ஆகிய குணங்களை வெகுவாக வளர்த்துக் கொள்ளுங்கள் - பாபா