azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Every one of you is a pilgrim on that road proceeding at your own pace, according to your qualification and the stage reached through your efforts. The advice that appeals or applies to one of you might not be appropriate to another, who traveled less distance or reached a more advanced state than your own state! When I tell one person to follow one line of spiritual discipline (sadhana), it is specifically for that person’s benefit! Each one of you has different mental, physical and spiritual make-up. When an individual is obese, the doctor advises certain types of food; when he is thin, he advises another group of foods, isn’t it? When doctors who treat diseases of the body have to prescribe different remedies, how much more specific and personal must be the remedies for the complex and varied conditions of mental situations and spiritual yearnings and aspirations of individuals across the bridge of time? (Divine Discourse, Mar 03, 1974)
TRUE DEVOTION LIES IN ACCEPTING BOTH PLEASURE AND PAIN WITH EQUAL-MINDEDNESS. - BABA
நீங்கள் ஒவ்வொருவரும், உங்களது தகுதிகள் மற்றும் உங்களது முயற்சிகளின் மூலம் நீங்கள் அடைந்துள்ள நிலைக்கு ஏற்றவாறு, உங்களுக்கே உரித்தான வேகத்தில், பாதையில் சென்று கொண்டிருக்கும் தீர்த்த யாத்திரீகர்களே. உங்களுக்குப் பிடித்த அல்லது பொறுத்தமான அறிவுரை, உங்களை விட குறைந்த தூரம் பயணித்த அல்லது உங்களது நிலையை விட அதிகமாக முன்னேறியுள்ள மற்றொருவருக்கு, பொருந்தாததாக இருக்கலாம் ! எப்போது, நான், ஒருவரை ஒரு ஆன்மீக சாதனையைப் பின்பற்றுமாறு கூறுகிறேனோ, அது அந்த மனிதரது நலனுக்கென்றே தனிப்பட்ட விதத்தில் குறிப்பிட்டுக் கொடுக்கப் பட்டதாகும்! உங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான மன, உடல் மற்றும் ஆன்மீக பாங்குகள் உள்ளன. ஒருவர் மிகவும் குண்டாக இருக்கும் போது, அவருக்கு வைத்தியர் ஒரு குறிப்பிட்ட வகையான உணவுகளை அறிவுறுத்துகிறார்; அவர் ஒல்லியாக இருக்கும் போது, மற்றும் வேறு ஒரு வகையான உணவுகளை பரிந்துரைக்கிறார் இல்லையா? உடலின் வியாதிகளைக் குணப்படுத்த வைத்தியர்களே வெவ்வேறு விதமான நிவாரணங்களை பரிந்துரைக்கும் போது, காலம் எனும் பாலத்தைக் கடந்து செல்பவர்களின் ,சிக்கலான மற்றும் வெவ்வேறு விதமான மன நிலைகள் மற்றும் ஆன்மீகத் தேடல்களுக்கான நிவாரணம், இன்னும் எவ்வளவு அதிகம் குறிப்பிடத் தக்கதாகவும், தனிப்பட்டதாகவும் இருக்க வேண்டும்?
சுகத்தையும், துக்கத்தையும், சமச்சீரான மனப்பாங்குடன்
ஏற்றுக் கொள்வதில் தான் உண்மையான பக்தி இருக்கிறது. - பாபா