azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Cleanse your emotions, passions, impulses, attitudes, and reactions - this is the essence of spiritual discipline from all faiths. Examine your mind and thoughts; do not seek other’s faults. See only good. Speak ill of none! If you slip into slander, repent and resolve not to give vent to that habit again. Humiliate none; respect everyone for the good in them. Their grief at your behaviour will haunt you during your last moments. Let every act of yours stand as your credentials when you leave the world. Let no single act be a drag, or a debit. Soak every moment in love for God. Of what avail is it to spend hours in meditation, and then spread anger and inflict resentment through your words and deeds with friends and family? The Gita recommends you to be satatam yoginah - ever controlled and yoked with the Divine. So be vigilant, be steady, be earnest. The steady person earns wisdom. (Divine Discourse, Nov 23, 1973)
A PURE HEART IS THE ESSENCE OF ALL SPIRITUAL PRACTICES. - BABA
உங்களது உணர்வுகள், உணர்ச்சிகள், உந்துதல்கள்,மனப்பாங்குகள் மற்றும் எதிர்செயல்களை தூய்மைப் படுத்துங்கள்- இதுவே அனைத்து மதங்களின் ஆன்மீக சாதனைகளின் சாரமாகும். உங்களது மனம் மற்றும் சிந்தனைகளை ஆராயுங்கள்; பிறரது குறைகளை நாடாதீர்கள். நல்லவற்றை மட்டுமே காணுங்கள். எவரைப்பற்றியும் கெடுதலாகப் பேசாதீர்கள்! அவதூறு பேசும் அளவிற்கு ஒருவேளை நீங்கள் தாழ்ந்து விட்டால், அதற்காகப் பச்சாதாபப் பட்டு, மறுபடியும் அப்படிப் பட்ட பழக்கத்திற்கு வழி கொடுக்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். எவரையும் அவமதிக்காதீர்கள்; அனைவரையும், அவர்களிடம் இருக்கும் நல்லவற்றிற்காக மதியுங்கள். உங்களது நடத்தையால் அவர்கள் படும் வேதனை, உங்களது இறுதித் தருணங்களில், உங்களை வாட்டும். இந்த உலகை விட்டு நீங்கள் செல்லும் போது, உங்களது ஒவ்வொரு செயலும், உங்களது நற்சான்றுகளாக நிலை கொண்டிருக்கட்டும். உங்களது எந்த ஒரு செயலும் ஒரு இழுபறியாகவோ அல்லது ஒரு கடனாகவோ இருக்க வேண்டாம். ஒவ்வொரு தருணத்தையும், இறைவன் பால் கொண்டுள்ள ப்ரேமையால் தோய்ந்திருக்குமாறு செய்யுங்கள். பல மணி நேரங்கள் தியானம் செய்து விட்டு,பின்னர் உங்களது சொற்கள் மற்றும் செயல்களின் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது கோபத்தைப் பரப்பி, வெறுப்பை ஏற்படுத்துவதால் என்ன பயன்? ஸ்ரீமத் பகவத் கீதை உங்களை ஸததம் யோகினஹ அதாவது எப்போதும் கட்டுப்பாட்டுடனும், தெய்வீகத்தில் ஆழ்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைவூட்டுகிறது. எனவே, விழிப்புடனும், நிலையாகவும், சிரத்தையுடனும் இருங்கள். சிரத்தையுடன் இருக்கும் மனிதன் ஞானத்தைப் பெறுகிறான்.
ஒரு பரிசுத்தமான இதயமே, அனைத்து ஆன்மீக சாதனைகளின் சாரம் ஆகும். - பாபா