azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Each religion emphasises one name and form and recommends its acceptance. Some even insist that God has no name or form. But in reality God is Akshara (indestructible, eternal) beyond all names and forms. God is! You reach the Akshara stage - the stage of attributeless unity in three steps of Sadhana: (i) I am Thine (ii) Thou art mine, and (iii) Thou art myself. Through Sadhana, you must transcend the duality of ‘I’ and ‘You’. ‘I’ is only the reflection of ‘You’ in this body. The consummation is reached when duality is superseded. Keep your heart cool, pure and bright - as the moonlight. Your mind must be cleansed by the mind only. Just as you shape an iron sickle or axe with an iron hammer, the mind is the shaper and shaped, both. The power which helps the mind to shape well, is faith in God. Cultivate that faith and everything else will be added unto you. (Divine Discourse, Jul 29, 1969)
OBEY YOUR GURU, FOLLOW HIS INSTRUCTIONS, AND PROGRESS ALONG THE SPIRITUAL ROAD- THAT IS REAL PADA PUJA (WORSHIP OF THE FEET). - BABA
ஒவ்வொரு மதமும், இறைவனுக்கு ஒரே ஒரு நாம, ரூபத்தை வலியுறுத்தி, அதை ஏற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது.சிலர், இறைவனுக்கு, எந்த நாமமோ அல்லது ரூபமோ இல்லை என்று கூட வலியுறுத்துகிறார்கள்.ஆனால், உண்மையில், இறைவன் அக்ஷரா ( அழிக்க முடியாவன், நிரந்தரமானவன்) அதாவது, அனைத்து நாம,ரூபங்களுக்கும் அப்பாற்பட்டவன். இறைவன் இருக்கிறான் ! குணங்களற்ற ஒருமை நிலையான அக்ஷராவை, நீங்கள் ஆன்மீக சாதனையின் மூன்று படிகளில் அடைகிறீர்கள் : (1) நான் உன்னுடையவன் (2) நீ என்னுடையவன் (3) நீ, நானே. ஆன்மீக சாதனையின் மூலம், நீங்கள், ‘’ நான் ‘’, ‘’ நீ ‘’ என்ற இருமை நிலைக்கு அப்பாற்பட்டுச் செல்ல வேண்டும். ‘’ நான்’’ என்பது, இந்த உடலில் ‘’ நீ’’ என்பதன் பிரதிபலிப்பே. இந்த சங்கமம், இருமை நிலையைத் தாண்டிச் செல்லும் போது அடையப் படுகிறது. உங்கள் இதயத்தை, நில ஒளியைப் போல, குளுமையாகவும், தூய்மையாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம், மனதினால் மட்டுமே பரிசுத்தமாக வேண்டும். எவ்வாறு நீங்கள் ஒரு இரும்பு அருவாளையோ அல்லது கோடாலியையோ, ஒரு இரும்புச் சுத்தியால் உருவாக்குகிறீர்களோ, அவ்வாறே, மனமே, உருவாக்குவது, உருவாக்கப்படுவது என்ற இரண்டுமே ஆகும். மனதை நல்லபடியாக உருவாக்கக் கூடிய சக்தி, இறை நம்பிக்கையே.அந்த இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், அனைத்தும் உங்களுக்குக் கிடைத்து விடும்.
குருவைப் பணிந்து, அவரது கட்டளைகளைப் பின்பற்றி, ஆன்மீகப் பாதையில் முன்னேறுங்கள். இதுவே அவருக்கு நீங்கள் செய்யும் உண்மையான “ பாத பூஜை’’ ஆகும். - பாபா