azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The Guru reminds the pupil of the inevitability of death and the transitory nature of existence upon the earth. When Yaajnavalkya resolved to go into the forest for a life of asceticism, he called his two wives before him and proposed to divide the riches he had earned between them. Before accepting her share, Maithreyi asked her husband whether the riches will help her to realise the Truth and achieve immortality. When she was told that they were hindrances and not helps, she refused to be burdened. Nachiketha refused the gift of empire, affluence, and years of healthy life. Prahlada taught the same lesson to his playmates. Buddha sought to solve the mystery of suffering and undertook renunciation of attachment as the first step in his sadhana. (Divine Discourse, Jul 19, 1970)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT,
OF SENSE CONTROL, OF RIGOROUS MIND TRAINING. - BABA
குரு, மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மையையும், இந்த பூமியில் வாழ்க்கையின் தாற்காலிகத் தன்மையையும், சீடருக்கு நினைவு படுத்துகிறார். யாக்ஞவல்கியர் எப்போது கானகத்தில் ஒரு சந்நியாசியின் வாழ்க்கைக்காக செல்ல முடிவு எடுத்தாரோ, அப்போதே அவர் தன் இரு மனைவியரையும் தன் முன் அழைத்து, அவர் ஈட்டிய செல்வத்தை இருவருக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தனது பங்கை ஏற்றுக் கொள்ளும் முன், மைத்ரேயி தனது கணவரிடம் இந்த செல்வங்கள் அவளுக்கு உண்மை நிலையை உணரவும், அமரத்துவம் பெறவும் உதவுமா என்று கேட்டார். அவை உதவிகளல்ல, வெறும் தடைகளே எனக் கூறப்பட்டவுடன், அவள் அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். நசிகேதா, சாம்ராஜ்யம், செல்வம் மற்றும் வருடக் கணக்கான, ஆரோக்யமான வாழ்க்கை ஆகியவற்றின் பரிசை மறுத்து விட்டார். பக்த ப்ரஹலாதனும், தனது நண்பர்களுக்கு இதே பாடத்தைத் தான் போதித்தான். புத்த பகவான், துன்பத்தின் ரகசியத்தைக் கண்டு பிடிக்க விழைந்து, பற்றுதலைத் தியாகம் செய்வதை, தனது ஆன்மீக சாதனையின் முதல் படியாக ஏற்றுக் கொண்டார்.
ஆன்மீகப் பாதை என்பது,பற்றின்மை, புலனடக்கம்
மற்றும் தீவிர மனப்பயிற்சியின் பாதையாகும் - பாபா