azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

First and foremost, make your heart pure. It is only purity that attracts Divinity. If the iron filings are rusted, even the most powerful magnet will not attract them. The iron filings may blame the magnet, saying it has no power. But the magnet tells them, “You may think as you please, I am not bothered. Get rid of the rust and become pure. Only then will I attract you.” In the same manner, how do you expect God to attract your mind, which is rusted with evil thoughts? See good, listen to good things, speak good and pleasant words, and undertake sacred activities. If you act in this manner, without your asking itself God will certainly bestow His grace on you. Contemplation on God is the only means to keep the senses pure. All the spiritual practices are meant to exercise control over the senses. (Divine Discourse, Feb 22, 2001)
HOW TO PURIFY THE MIND? BY STARVING IT OF THE BAD FOOD IT RUNS AFTER, NAMELY, OBJECTIVE PLEASURES. AND FEEDING IT ON THE WHOLESOME FOOD, NAMELY, THOUGHT OF GOD. - BABA
முதன் முதலில், உங்கள் இதயத்தைத் தூய்மையாக ஆக்கிக் கொள்ளுங்கள். தூய்மை மட்டுமே தெய்வீகத்தை ஈர்க்கிறது. இரும்புத் துகள்கள், துருப்பிடித்து இருந்தால், அதி சக்தி வாய்ந்த காந்தத்தால் கூட அவற்றை ஈர்க்க முடியாது. இரும்புத் துகள்கள், அதற்குச் சக்தி இல்லை எனக் காந்தத்தைக் குறை கூறக் கூடும். ஆனால், காந்தம், ‘’ நீங்கள் என்ன வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள், எனக்குக் கவலை இல்லை. துருவை நீக்கி விட்டுத் தூய்மையாக ஆகுங்கள். அதன் பிறகே, நான் உங்களை ஈர்ப்பேன் ‘’ என்று கூறி விடும்.அதைப் போலவே, இறைவன் தீய சிந்தனைகளால் துருப்பிடித்து இருக்கும் உங்கள் மனதை ஈர்ப்பான் என்று நீங்கள் எவ்வாறு எதிர் பார்க்க முடியும்? நல்லவற்றையே பார்த்து, நல்ல விஷயங்களையே கேட்டு, நல்ல மற்றும் இதமான வார்த்தைகளையே பேசி, புனிதமான செயல்களையே மேற்கொள்ளுங்கள். நீங்கள், இவ்வாறு நடந்து கொண்டால், நீங்கள் கேட்காமலேயே, இறைவன் கண்டிப்பாகத் தனது அருளை உங்கள் மீது பொழிந்திடுவான். இறைவனைத் தியானிப்பது ஒன்றே, புலன்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான ஒரே வழியாகும். அனைத்து ஆன்மீக சாதனைகளும், புலன்கள் மீது கட்டுப்பாடு செலுத்துவதற்காக ஏற்பட்டவையே.
மனதை எப்படித் தூய்மைப் படுத்துவது? அது பின் தொடர்ந்து ஓடும் தீய உணவுகளான பொருட்களின் சுகங்கள் அதற்குக் கிடைக்காமல் செய்து, இறைச்சிந்தனை என்ற பரிபூரணமான உணவை அதற்கு அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் -பாபா