azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You must make your mother happy. When you cannot make your mother happy, how can you be peaceful? It is meaningless to worship God without revering one’s own parents. Hence first offer worship to your mother as she is the one who has given you birth. Only if the mother’s heart is nectarous will the whole world be nectarous. Lord Rama’s divinity blossomed under the loving care of Kausalya. As He was born from the womb of Kausalya, He got the qualities of Kausalya. That is why He is worshipped as God. Shivaji could do so much sacrifice for the country because he was born to the pure lady, Jijabai. It is because of the nobility of the mother that the children attain good fortune. So, embodiments of love! There is nothing beyond love. Only love is the mainspring of all your good fortune. You should therefore adore and worship the mother who is the embodiment of love. (Divine Discourse, Jun 01, 2001)
YOU MUST SHOW TOWARDS YOUR MOTHER THE SAME LOVE AND SPIRIT OF SACRIFICE
WITH WHICH SHE HAS BROUGHT YOU UP. - BABA
நீங்கள் உங்கள் தாயை மகிழ்விக்க வேண்டும்.எப்போது உங்களால், உங்கள் தாயை மகிழ்விக்க முடியவில்லையோ, உங்களால் எப்படி சாந்தியுடன் இருக்க முடியும்? ஒருவரது சொந்தப் பெற்றோரையே மதிக்காமல், இறைவனை வழிபடுவதில் அர்த்தமே இல்லை. எனவே, உங்களை ஈன்று எடுத்ததால், முதலில் உங்கள் தாயாரை வழிபடுங்கள். தாயின் இதயம் அமுதம் போன்றதாக இருந்தால் மட்டுமே, உலகனைத்தும் அமிர்தமயமாக இருக்கும். பகவான் ஸ்ரீராமரின் தெய்வீகம், தாயார் கோசலையின் அன்பார்ந்த பரிவின் கீழ் தான் பரிமளித்தது. அவர், கோசலையின் கர்ப்பத்தில் பிறந்ததால் தான், கோசலையின் குணங்களைப் பெற்றார். அதனால் தான் அவர் இறைவனாக வழிபடப் படுகிறார். பரிசுத்தமான தாயான ஜீஜாபாய்க்குப் பிறந்ததால் தான், சிவாஜியால் நாட்டிற்கு அந்த அளவு தியாகம் செய்ய முடிந்தது. தாயின் சீரிய பண்புகளின் காரணமாகத் தான், குழந்தைகள் நல்ல எதிர்காலத்தைப் பெறுகிறார்கள். எனவே, ப்ரேமையின் திருவுருவங்களே! ப்ரேமைக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. உங்களது அனைத்து நல்ல அதிருஷ்டங்களுக்கும் ப்ரேமையே ப்ரதான உந்து சக்தியாகும். எனவே, ப்ரேமையின் உருவே ஆன தாயை, நீங்கள் போற்றி வழிபட வேண்டும்.
உங்களை வளர்த்து ஆளாக்கும் போது, அவள் காட்டிய அதே ப்ரேமை மற்றும் தியாக உணர்வை, நீங்கள் உங்கள் தாயிடம் காட்டவேண்டும் - பாபா